140
II-
அப்பாத்துரையம் - 2
வளைதல் என்பது. பெறும்போது கை நீண்டு வளைவதாலேயே வாங்குதல் பெறுதல் என்னும் பொருள் பெற்றது.
‘அகலுதல்' என்ற சொல் விரிதல், விலகுதல் என்ற இரு பொருளும் உடையது. அகன்ற என்னுமிடத்து முன்னைய பொருளும், அகன்றான் என்னுமிடத்துப் பின்னைய பொருளும் மட்டும் இன்று வழங்குகிறது, எல்லா இடத்தும் முன்னைய பொருளே முந்தியது பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன.
என்று
இத்தகைய பொருள் மாறுபாடுகளைப் பொருள் விரித்தல், சுருங்குதல், இறத்தல், இழிதல், பருத்தல், நுணுகுதல் என விரித்துக் காட்டுவார் பாவாணர் தேவநேயர். பேராசிரியர் அறிவு முனைவர் மு. வரதராசனாரும் இவற்றைக் கூர்ந்துணர்ந்து விளக்கியுள்ளார்.
இவ்வகைகளால், பண்டைத் தமிழில் ஒரு பொருட் பல சொற்கள் முற்றிலும் ஒரே பொருள் பல சொற்களல்ல என்று அவர் காட்டியுள்ளார். தமிழர் அறிவுப் பண்பும் கலைப்பண்பும் மேலோங்கியிருந்த காலத்தில், அவை தந்த நுண்பொருள் வேறுபாடுகளை அவர் சுட்டிக்காட்டிப் புத்தொளி தந்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, சொல்லுதல் என்ற வினைக்கே தமிழில் செப்புதல், கூறல், இயம்பல், பகர்தல், உரைத்தல், கிளத்தல், நவிலல், நுவலல், புகலல், பகர்தல், விளம்பல், கழறுதல், சாற்றுதல், அறைதல், பறைதல், விளக்கல் முதலிய எண்ணற்ற சொற்கள் உள்ளன. நிகண்டுகள்கூட இத்தகைய தமிழ்ச்சொல் வளங்களை விளக்கச் சிறிதும் போதமாட்டா. அருஞ்சொல்லிலும் சமற்கிருதச் சொல்லிலுமே அவை குழைந்து நெளிந்தன. நாளதுவரை வெளிவந்துள்ள அகர வரிசைகளும். சிறப்பாக வெள்ளைய ரல்லாத நம் தமிழர் வெளியிட்ட அகர வரிசைகளும் எக்காரணத்தாலோ தமிழ் மொழிக்கு அகர வரிசை என்று கூறத் தக்கவையாய் அமையவில்லை! வேறு எந்த மொழிக்கு அகர வரிசைகள் என்பதையும் பராபரம்தான் அறிதல் வேண்டும்!
ஒரு பொருட் பல சொற்கள் ஒவ்வொன்றும் உண்மையில் ஒரு நுண் கருத்தை, கருத்து வேறுபாட்டைக் குறிப்பதே என்று பாவாணர் அவர்கள் திறம் பட எடுத்துக் கூறியுள்ளார்.