பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

அப்பாத்துரையம் – 2

வந்தது. மாணவர் ஆதரவாலும் தமிழ்ப் பற்றில் முனைந்தெழுந்த இயக்கங்களின் சார்பில் எழுந்த பத்திரிகையாளர், எழுத்தாளர்கள் ஆகியோர் ஆதரவாலும், தோன்றிய தமிழ் இயக்கம் வலுப் பெற்றதுடன், எளிய நடைப் பக்கமாகவும் அது திரும்பிற்று.

எளிய நடையின் போர்வையில் நின்று தனித் தமிழ் எதிர்ப்பாளர் ஒருபுறம் அதனை எதிர்த்தனர். அதே போர்வையில் புகுந்து பிறமொழிக் கல்வியால் உயர்ந்தவர் அம்மொழிகளில் எதிர்பார்க்க முடியாத ‘கல்லா எளிமை'யை இலக்கியத் துறை, அறிவுத் துறைகளில்கூடக் கோரினர். ஆனால், இதே எளிய நடை நல்ல தனித் தமிழ் எழுத்தாளர்க்கும் உதவிற்று. குடியாட்சி நாள்களில் பொதுவாகவும், அடிமைக் குடியாட்சி நாள்களில் சிறப்பாகவும் எளிய நடையே சிறந்த கருவி என்பதை அவர்கள் கண்டார்கள். எளிய நடையில் கலப்புமொழி வெல்லுமானால், அதே எளிய நடையில் தனித்தமிழ் இரட்டிப்பு மடங்கு வெற்றி தரும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

வேண்டுமென்று கடுநடை பயிலாத இடத்திலும், வேண்டு மென்று இலக்கியநடை பயிலாத இடத்திலும், தனித் தமிழே மிக எளிய நடை, தனித் தமிழே மிக இனிய இலக்கிய நடை என்பதும் தனித் தமிழ் எழுத்தில் பயின்ற எழுத்தாளர் கண்ட உண்மையாகும்.

நகர மக்கள் பேச்சைவிட நாட்டுப்புறப் பேச்சுத் தனித் தமிழ்ப் பண்பு மிகுதியுடையது. ஒருசிலராயினும் ஆட்சி வகுப்பினரான உயர் குடியினர் எனப்படுபவர் பேச்சிலுந்தான் கலப்புத் தமிழை மிகுதியாகக் காண்கிறோம். செல்வர் ஆகியவர் பேச்சிலும் மிகப் பெரும்பாலான பொதுமக்கள் பேச்சிலும் தாழ்ந்தவர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் பேச்சிலும் தனித் தமிழையே மிகுதியாகக் காணலாம்.ஆகவே, தனித் தமிழ்த் தேசம் வளர்க்கும் இனத் தேசியத் தமிழ்; அதுவே குடியாட்சித் தமிழும் ஆகும் என்பது தெளிவு.

இலக்கியத் தமிழும் மக்கள் தமிழும்

தனித்தமிழ் இயக்கம் கண்ட, கண்டுவரும் கடைசிப்படி, தமிழ்கடந்தபடி. அதே சமயம் மொழிநூலார் தமிழகத்திலேயே இன்றும் காணவேண்டிய ஒருபடி ஆகும்.

பேசுகிறபடி எழுதுவது, எழுதுகிறபடி பேசுவது என்பது எந்த மொழியிலும் முடியாத ஒரு செயல். முற்றிலும் முடிவதாக