154
அப்பாத்துரையம் - 2
கொண்டார். ஆனால், கடைச்சங்க வாழ்வை ஆராய்ச்சியாளர் ஏற்கும்படி நிலை நாட்டிய மறைமலையடிகள், முச்சங்க வாழ்வுபற்றிய தம் கருத்தை அவ்வாறு பிற அறிஞர் ஏற்கும்படி நிலை நாட்ட முடியவில்லை. இதற்கு அவர் முச்சங்க வாழ்வில் அகத்தியர் மரபை மறுக்க நேர்ந்ததே ஒரு முக்கிய காரணமாய் அமைந்த தென்னலாம்.
தொல்காப்பியத்துக்கு முற்பட்டதாக அகத்தியம் என்ற இலக்கணத்தை முச்சங்க மரபு குறிக்கிறது. அத்துடன் தொல்காப்பியம் இயல் தமிழ்க்கு மட்டும் இலக்கணம் என்றும், அகத்தியம் முத்தமிழ்க்கும் உரிய, தொல்காப்பியத்திலும் விரிவான முழுத் தமிழ் இலக்கணமென்றும் அம்மரபுரை கூறிற்று.*
அகத்தியர் மரபு இவ்வாறு முச்சங்க மரபுடன் முத்தமிழ் மரபை இணைக்கிறது.
சங்க இலக்கிய வெளியீட்டைப் போலவே, சிலப்பதிகார வெளியீடும் முத்தமிழ் மரபின் விளக்கத்துக்கு இன்றியமையாதது.
அகத்தியர் மரபை மறுத்த மறைமலையடிகள் சிலப்பதி காரத்திலும் கருத்துச் செலுத்தத் தவறினார். இங்ஙனம் வியத்தகு முறையில், மறைமலையடிகள் முச்சங்க மரபை ஏற்று நிலை நாட்டினார். ஆனால், அதனை வலியுறுத்த உதவும் முத்தமிழ் மரபை மறுத்து, முச்சங்க மரபும் புறக்கணிக்கப்படுவதற்குக்
காரணமானார்.
அகத்தியர் மரபில் ஏற்பட்ட ஒரு மயக்கமே இவ்விசித்திரச் சூழலுக்குக் காரணமாய் அமைந்தது.
முச்சங்க மரபில் கண்ட அகத்தியர் மரபை உருத்தெரியா மரபாக்கிய பண்பு புராண அகத்தியர் மரபே.
விழுதுகள் பல ஓடிய ஆலமரத்தில், எது தாய் மரம் என்று காண்பது அரிது. புராண அகத்தியர் மரபுடன் இணைந்து பின்னிய முச்சங்க அகத்தியர் மரபும் கிட்டத்தட்ட இந்நிலை அடைந்துள்ளது.
மறைமலையடிகள் இவ்விரு மரபுகளையும் பிரித்துக் காணத் தயங்கியதனாலேயே, புராண அகத்தியர் மரபை