தென்மொழி
159
ஆராய்ச்சியாளர், அதனினும் நீடித்த இப்புகழ்த் தொடர்பின் மரபில் கருத்துச் செலுத்தாதது வியப்புக்குரியதேயாகும்.
செங்குட்டுவன் முன் சாக்கைக் கூத்தாடிய பறையூர்ச் சாக்கையர் குடியும் இது போல் வட திருவாங்கூரிலுள்ள பறவூரில் ன்றும் உள்ளது. உள்ளது. அக்குடியினர் இன்றும் அதே சாக்கைக் கூத்தை, அதே சேர மரபின் இந்நாளைய கிளை மரபினரான திருவாங்கூர் அரசர் முன் நின்று ஆடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மாளாநீள் மரபுடைய தமிழர் வாழ்வில் அயல் மரபுக் கதைகள் எளிதில் இணைந்து ஒட்ட முடிகிறது. தாய்மரபு மட்டுமே புறக்கணிக்கப்படுகிறது! தமிழகத்தின் கோலம் இன்னும் இத்தகைய அலங்கோலங்கள் நிறைந்ததாகவே உள்ளது.
மறைமலையடிகள் முடிவு
தொல்காப்பிய ஆசிரியர் ஓர் ஆரியர் என்பதற்கோ ஆரிய முனிவர் என்பதற்கோ, அவர் ஒரு முனிவரின் சீடர் என்பதற்கோ, அகத்தியரின் சீடர் என்பதற்கோ, அவர் திருணதூமாக்கினி என்ற ஆரிய மறு பெயர் அல்லது இயற்பெயர் கொண்டவர் என்பதற்கோ, இட்டுக் கட்டிய கதை தவிர வேறு ஆதாரம் இல்லை. அந்த இட்டுக்கட்டிய கதையும் பொருத்தமாக, திறமையாக இட்டுக் கட்டப்பட்ட கதை அன்று.
தொல்காப்பியத்தையும்
அதன்
பாயிரத்தையும் பொறுத்தவரை, அகத்தியம் என்ற ஒரு நூல் இருந்ததென்பதற்கோ; அகத்தியர் என்று ஒரு புலவர் இருந்தா ரென்பதற்கோ; அவர் ஓர் ஆரியர் அல்லது ஓர்ஆரிய முனிவர் என்பதற்கோ ஒரு சிறு சான்றின் நிழல்கூடக் கிடையாது.
தொல்காப்பியம் ஒரு வழிநூல் என்பதற்குக்கூட நூலோ பாயிரமோ ஒரு சிறிதும் இடம் தரவில்லை.
இந்நிலையில் மறைமலையடிகளார் தொல்காப்பியத்தை முதல் நூலாகவே கொண்டதில் சிறிதும் தவறில்லை. அஃது டைச் சங்க நூலன்று, முதற்சங்க நூலே என்று அவர் கருதினார். இதுவும் ஏற்கக்கூடாத முடிபன்று. அது வேறு எம்மொழிக்கும்,