160
அப்பாத்துரையம் - 2
சமற்கிருதத்துக்கும்கூட அமையாத, தமிழின் சிறந்த தனித்தமிழ் லக்கண நூல் என்று அவர் அறுதியிட்டுக்
முழுமுதல் காட்டினார்.
புராணக் கதை படிந்துத் தோய்ந்த அகத்தியர் மரபை அவர் அறவே போலி என்று ஒதுக்கித் தள்ளினார். இங்ஙனம் அப் பேரறிஞர் ஒதுக்கித் தள்ளியதில் வியப்பு எதுவுமில்லை. உண்மை வியப்பு எதுவெனில் இது செய்ய ஒரு மறைமலையடிகளும், ஒரு மறைமலையடிகளின் முழு வாழ்நாளின் அயரா உழைப்பும், ஒரு மறைமலையூழியின் இடைவிடாத வாத எதிர்வாதங்களும் தேவைப்பட்டன என்பதே.
அகத்தியர் மரபுக்கு மறைமலையடிகள் எதிர்ப்புடன் தாக்குப் பிடித்து நீடித்து நிற்கும் வலு இருந்தது. இது தமிழ்மரபின் வலுவன்று. முச்சங்க முத்தமிழ் மரபின் வலுவன்று. வை இன்னும் பொது மக்கள்வரை சென்று எட்டாதவை.
ன்னும் வெளியுலகம் அறியாதவை. அது தமிழ்ப் புராண மரபின் வலுக்கூட அன்று. ஏனெனில், ஆரியப் புராணங் களளவில் தமிழ்ப் புராணங்கள் இன்னும் தமிழரிடையேகூடப் பரவவில்லை. உண்மையில் ஆரியப் புராண மரபின் வலுவே. காற்றுச் செல்லாத இடத்திலும், கடவுட் பற்று ஊடுருவாத
டத்திலும் அது சென்று ஊடுருவிப் பரந்துள்ளது. ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட அஃது அரசியல், சமய, சமுதாய ஆட்சி வகுப்பினராலும், கல்வி நிலையங்களாலும் பரப்பப்பட்டு மக்கள் அறியாமையுடன் கலந்து பரவி அறிவு கெடுக்கும் ஒரு மாயையாகி
உள்ளது.
தமிழ்ப் புலவரிடையிலும் அவர்கள் மூலமாக மாணவரிடையிலுமாவது ஆராய்ச்சித் துறை மூலம் இந்த மாயையை ஒரு சிறிது அகற்றிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. மறைமலையடிகளின் அருஞ்சாதனையும், மறைமலை யூழியின் பெருஞ் சிறப்பும் இது.
புதிய மாயை
அகத்தியர் மரபு ஒழிக்கப்பட்டபோது, அதன் புராண மரபும், கதை மரபும் மட்டுமன்றி, முச்சங்க மரபும் பெரிதும்