தென்மொழி
161
மறக்கப்பட்டுவிட்டது. முத்தமிழ் மரபும் கருத்தினின்று ஒதுக்கப்பட்டது. இறையனாரகப் பொருள் தரும் முச்சங்க மரபுடனும், முத்தமிழ் மரபுடனும் அதற்குத் தொடர்பு உண்டு. புராண மரபை ஒழிக்கும் ஆர்வத்தில் இது மறக்கப்பட்டது. முச்சங்க மரபு, சங்க வாழ்வு, முத்தமிழ் மரபு ஆகியவற்றின் சார்பில் ஏற்கெனவே இருந்து வந்த ஆராயா அவநம்பிக்கை இம்மறக்கடிப்பினால் வலியுறுத்தப் பெற்றது.
கடைச்சங்க நூல்கள் வெளிவந்த பின்னும்,சிலப்பதிகாரம் வெளிவந்து உலவத் தொடங்கிய பின்னும் முச்சங்க, முத்தமிழ் மரபுகள் இயல்பாக மீண்டும் ஆராய்ச்சிக்கு எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இன்றுவரைஅவை அவ்வாறு எடுக்கப்பட வில்லை. ஆராய்ச்சியாளர் கவனம் எக்காரணத்தாலோ அப்பக்கம் செல்லவேயில்லை. மறைமலையடிகளார் ஆர்வ முடிவு ஒரு தமிழ் மாயையாயிற்று. ஆரிய மாயையைத் திருத்தவந்த தமிழ் மரபு அதனுடன் கலந்து ஒரு புதுத் தமிழக மாயையாகப் பரவியுள்ளது.
மறுமலர்ச்சி ஓங்கி வளர்தல் வேண்டுமானால், மறுமலர்ச்சி ஆராய்ச்சி யாளர் இவற்றை மீண்டும் மறு ஆய்வுக்குக் கொண்டு வரல் வேண்டும். வரலாற்று நோக்கு என்னும் உரைகல்லில் அவற்றின் மழுங்கிய முனைகளை மீட்டும் தீட்டுதல் வேண்டும்.
தொல்காப்பியம் ஒரு வழிநூலன்று என்பதையும் அதன் ஆசிரியர் ஆரியரோ, ஆரிய முனிவரோ, அகத்தியர் மாணவரோ அல்லர் என்பதையும் விளக்கிய மறைமலையடிகளார் முடிவு அப்பழுக்கற்றதே. தொல்காப்பிய நூலும் பாயிரமும் இவற்றை நிலைநாட்டப் போதியன.
மேலும், அகத்தியர் என்ற ஆரிய புராண முனிவர் பற்றிய கதைகளுக்கும் தமிழ்க்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. தொடர்பு உண்டுபண்ணியவை ஆரிய புராணங்கள்கூட அல்ல, தமிழ்ப் புராணங்களே.
மறைமலையடிகள் கொண்ட இம்முடிவும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்க, அறிவுக்கொத்த முடிவே.
ஆனால், அகத்தியம் என்ற ஒரு நூலே இருந்ததில்லை, இருந்திருக்க முடியாது என்பதையோ, அதன் ஆசிரியராக