பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

163

உரைகளிலும் சிறப்பாகவும், சமற்கிருதந் தாண்டித் தமிழ்க்குச் சிறப்புத் தரப்பட்டுள்ளது.பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் இக்கருத்தையே மேற்கொண்டுள்ளது.

தமிழ் ஒன்றே இலக்கண வரம்புடையமொழி, தெய்விக மொழி என்று அது வலிறுத்துவது காணலாம்.

கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்தஇப் பசுந்தமிழ், ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ!

இங்கே முத்தமிழ் மரபு சுட்டப்படுகிறது. முச்சங்க மரபும் குறிக்கப் படுகிறது. அவற்றின் மூலம் சமற்கிருதத்துக்கு அமையாத புராணச் சிறப்பை இப்பாட்டுத் தமிழ்க்குத் தேடித் தருகிறது. சிவபெருமான் முதற் சங்கத்தில் புலவராக வந்தமர்ந் திருந்ததாக இறையனார் அகப்பொருளுரை குறித்த செய்தியே அது. தவிர சமற்கிருதமும் இலக்கண வரம்பிலா மொழி என்று இங்கே சுற்று முகமாகப் பழிக்கப்பட்டுள்ளது. இலக்கணத்தின் நிலையாகிய பொருளிலக்கணம் சமற்கிருதத்துக்கு என்பதை இங்கே கவிஞர் நமக்கு நினைவூட்டுகிறார்.

உயிர்

ல்லை

உலகின் எல்லா மொழிகளையும் வென்று ஆரியம் அதாவது சமற்கிருதத்துடன் போட்டியிடும் பெருமையுடையது தமிழ் என்கிறார், காளத்திப் புராணம் பாடிய கருணைப் பிரகாசர். சமற்கிருதத்தைத் தாண்டிய தமிழின் முன்னைய சிறப்பு இங்கே அதனுடன் போட்டியிடும் சிறப்பாகத் தளர்ந்துவிட்டது காணலாம்.

மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி

இலக்கணம் செய்யப் பெற்றே

அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந் தேத்தல் செய்வாம்.