(164)
அப்பாத்துரையம் – 2
மேலும், இங்கே சிவபெருமான் தமிழ்ப் புலவராயிருந்தது போய் தமிழ் இலக்கணம் அருளியவராய்விடுகிறார்.
நம் காலத்துக்கு மிக அணிமையில் வந்த புராண ஆசிரியர் காஞ்சிப் புராணம் பாடிய சிவஞானமுனிவர். அவர் சமற்கிருதம் அல்லது வடமொழிக்கு முதலிடம் தந்து, தமிழ்க்கு இரண்டாம் இடம் தந்துள்ளார்.
“வடமொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை
உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்
என்றும்
கொல்லேற்றுப் பாகர்'
“இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்......
இரு மொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ?"
என்றும், அவர் பாடியுள்ளார். இங்கே வடமொழி என்றது சமற்கிருத மொழியை என்பது தெளிவு. சிவபெருமான் தமிழ்ப் புலவராகவில்லை. தமிழ் இலக்கணம் அருளவில்லை. தமிழ் மொழியையே தந்திருக்கிறார். ஆனால், அகத்தியர்க்குத் தமிழைத் தருமுன் பாணினிக்குச் சமற்கிருதம் அருளியதாக இவர் குறிக்கிறார். இரண்டாம் பாட்டில் இருமொழியும் நிகர் என்றுகூட அவர் கூறவில்லை. நிகரல்ல என்று கூறுபவரை மறுப்பவர் போல நிகர் என்பதில் ஐயமுமுண்டோ என்று கேட்கிறார்.
தொல்காப்பியத்துக்கு
அகத்தியம் முற்பட்டது.
அகத்தியத்துக்கும் பாணினியம் முற்பட்டது என்ற கருத்தையும், ஆசிரியர் இங்கே மெல்லப் புகுத்தியுள்ளது காணலாம். தவிர, ஒரு தமிழ்ப் புராணத்திலேயே தமிழர் வணங்கும் ஒரு தெய்வம் சமற்கிருத மொழியைத் தன் மொழியாகக் கொண்டு அதற்கு