தென்மொழி
167
'மொழி வளர்க்கச் சங்கம்' அமைத்து நடத்துவது என்பது இன்றைய நாகரிகம்மிக்க மேலை நாடுகளில்கூட அரிதான ஒரு செயல். இதை அவ்வளவு பழைமையான நாள்களிலேயே தமிழர் ஏற்படுத்தியிருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று!
இவ்வாதம் இன்னும் பல இடங்களில் வலிமையுடைய ய வாதமாகவே கருதப்படத்தக்கது. கடைச்சங்க வெளியீட்டால் சங்க வாழ்வு உறுதிப்பட்டதே யன்றி, முச்சங்க வாழ்வு உறுதிப்படவில்லை. அதில் அவநம்பிக்கையுடைய வர்களுக்கு அவநம்பிக்கையையே ஒரு முடிவாக்கிவிட இது போதும்.
ஆயினும், இவ்வாதம் அரைகுறை மெய்ம்மைகளுடன் பொய்ம்மைகளும் முரண்பாடுகளும் நிறைந்தது. ஆராயுமுன் ஆராயா அவநம்பிக்கையை முடிவாகக் குறிப்பது. அடிமை மனப்பான்மையும் தமிழ் மரபில் அவமதிப்பும் கொண்டது.
முதலாவது, சங்கவாழ்வு மேலை நாடுகளில் அரிதாயினும் ல்லாததல்ல. பிரான்சு நாட்டில் நீடித்த பல நூற்றாண்டுப் பழைமையுடையது.
மேலை நாடுகளில் பல்கலைக் கழகங்கள் ஆயிர ஆண்டுகளுக்குட்பட்ட வாழ்வே. அதுவும் அராபியர் தந்த வாழ்வே. அதற்கு முற்பட அராபியரும் உரோம கிரேக்கருமே அம் மரபை ஓரளவு கொண்டிருந்தனர். ஆனால், புத்தர் கால இந்தியாவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டே நாலந்தா, விக்கிரமசீலா, வலபி முதலிய இடங்களில் பல்கலைக் கழகங்கள் இருந்தன.
இவற்றை மேற்குறிப்பிட்ட அவநம்பிக்கைவாதி அறிந்திருக்கலாம். அறியாதிருக்கலாம். ஆனால், இவை தம் வாதத்தை மறுப்பதாக அவர் கருத மாட்டார். ஏனென்றால், உயர் பண்பாடு புதிய மேலை நாடுகளுக்கும் பழைய ஆரிய இனத்துக்கும் மட்டுமே உரியன என்ற நம்பிக்கை அவர் வாதத்தில் தொனிக்கிறது. அவ்வளவு பழைமையான நாள்களிலேயே தமிழர் என்ற அவர் சொற்களின் தொனி இது. மேலை நாடுகளிலோ, ஆரிய இனத்திலோ உயர் பண்பாடு இருப்பது நம்பகமான செயல் என்று அவர் கொள்கிறார். தமிழரிடத்தில் அஃது இருந்திருக்க