பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

அப்பாத்துரையம் - 2

இறையனார் அகப்பொருளுரையின் கடைச்சங்கப் பட்டியலைப் போலவே, முதல் இடைச்சங்கப் பட்டியலும் நிறை பட்டியலன்று, குறை பட்டியல் என்றே தோற்றுகிறது. ஏனெனில், இந்த இறந்துபட்ட பட்டியலில் சங்க மரபில் கண்ட முதற் சங்க இசைத் தமிழ் நூல்களான முதுநாரையும் முதுகுருகும், முதற் சங்க நாடகத் தமிழ் நூல்களான முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் ஆகியவையும் உள்ளன. ஆனால், சங்க மரபில் குறிக்கப்படாத இசைத் தமிழான பஞ்ச பாரதியமும் நாடகத் தமிழ் நூல்களான பரதம், அகத்தியம் (இது முத்தமிழ் அகத் தியமாயிருக்கலாம்) ஆகியவையும் தொன்னூல்களாகவே இங்கே குறிக்கப்பட்டன.

'ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாதவை' என்று அடியார்க்கு நல்லார் குறித்த நூல்களுள் முதற்சங்க நாடகத் தமிழ் நூல்களான செயிற்றியம், குணநூல் ஆகியவற்றிலிருந்தும், இடைச் சங்க கால இசை நூலாகிய சிகண்டியார் இயற்றிய இசை நுணுக்கத்திலிருந்தும்; கடைச் சங்க நாடக நூலாகிய கூத்து நூலிலிருந்தும் அவரே நிரம்ப மேற்கோள் சூத்திரங்கள் தந்துள்ளார்.

ச் சங்க மரபுக்கு வெளியேயும் அவர் கடைச்சங்க நாடகத் தமிழ் நூலான மதிவாணனார் முதல் நூல் ஒன்றைக் குறிப் பிட்டுள்ளார்.

அடியார்க்கு நல்லார் காலத்தில் நடு இறுதி காணாத நூல்களுள் ஒன்றான, இசை நுணுக்கம் அல்லாமல், பாரசவ முனிவருள் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம், அறிவனார் செய்த பஞ்சமரபு, ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் ஆகியவை இறவாது நிலவியதாகவும் அவற்றையே அவர் சிலப்பதிகார ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியதாகவும் குறிக்கிறார்.

மேற்குறிப்பிட்டவற்றுள்ளே முதற் சங்க நாடகத் தமிழ் நூல்களான செயிற்றியம், குணநூல், அவிநயம், இடைச்சங்க சைத்தமிழ் நூலான சிகண்டியார் இயற்றிய இசை நுணுக்கம்; டைச்சங்க நாடகத் தமிழ் நூல்களெனத் தோற்றும் ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதியம்; அறிவனார் இயற்றிய