பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

,

179

பஞ்ச மரபு; கடைச் சங்க நாடகத் தமிழ் நூல்களான மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், கூத்துநூல் ஆகியவற்றிலிருந்தும்; இனமறியப் படாத நாடக நூல், நூல் சொல்லகத்தியம், ஆசிரியமாலை ஆகியவற்றிலிருந்தும் அடியார்க்கு நல்லார் மேற்கோள் சூத்திரங்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன.

முனைவர் உ.வே. சாமிநாதய்யர் அனுபவ உரைகள்

முனைவர்

உ.வே. சாமிநாதய்யர் தம் மூன்றாம் பதிப்புரையில் 'அடியார்க்கு நல்லார் கால நூல்களும் இறந்து பட்டன என்பது தெளிவு' என்று குறிக்கிறார்.

பதிப்பு வேலைக்குரிய தம் உரையாராய்ச்சி பற்றிய அவர் அனுபவத்தைக் குறித்து அவர் கூறுவதாவது:

“இவற்றிலுள்ள இசை நாடகப் பகுதிகள் எனக்குக் கிடைத்த கச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தானந்தப் பிரகாசிகை முதலிய தமிழ் நூல்களைக் கொண்டும், இசையிலும் பரதத்திலும் வல்லோரை வினாவியும் ஒருவாறு ஆராய்ச்சி செய்யப்பெற்றன.”

இசை நாடகத் தமிழ் மரபு அழிந்துவந்துள்ள வகையையும் அவர் இதன் பின்கூறும் சொற்களே சுட்டிக் காட்டுகின்றன.

66

'அங்ஙனம் செய்யப்பட்டும் சில பாகம் மட்டும் சற்றே விளங்கின. இசை நாடகங்களுக்குரிய பரிபாஷைகள் (துறைச் சொற்கள்) பெரும்பாலன வடமொழியிலும் (சமற்கிருதத்திலும்) தென்மொழியிலும் (தமிழிலும்) வேறு வேறு உருவங்களோடு கூடியிருந்ததால் இவற்றிலுள்ள சொற்கள் பல வட (சமற்கிருத) நூல்களால் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. இந்நூலில் அடியார்க்கு நல்லார் ஒவ்வொன்றையும் பழைய தமிழ்நூல் மேற்கோள்களைக் கொண்டு நன்கு புலப்படுத்தியிருந்தும், அப்பழைய நூல்களும் அவற்றின் கருத்தை ஒருவாறு எடுத்துச் சொல்வோரும் இக்காலத்து ல்லாமையால், அவை அறிதற்கரிதாயிருக்கின்றன.

"அன்றியும் இவற்றில் வந்திருக்கிற இயற்றமிழ்ச் சொற்களுட் சில க்காலத்து வழங்காதொழிந்தமையால், அவற்றுக்குப் பொருள் ஒரு தலையாகப் புலப்படவில்லை. அவற்றினுருவமும் விளங்கவில்லை.