பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

189

முதல்வன் என்ற பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பொருள் இதைச் சுட்டிக் காட்டுகிறது. சமற்கிருத உரையாசிரியர்கள் பகவன் என்பதற்குக் 'கலியாண குணங்களை யுடையவன். அதாவது நற்குணக் கடல் என்றே பொருள் கூறினர். திருவள்ளுவரின் அறவாழி அந்தணன்' இதை நினைவூட்டவல்லது.

தெய்வம் என்பதனை ஊழ் என்று பொருள் கொள்வது முற்றிலும் தவறன்று,ஆனால், முற்றிலும் சரியுமன்று, ஊழ் என்பது இயற்கையாற்றல், சமுதாயச் சூழல், காலச்சூழல் அல்லது உயிர்மரபு ஆகிய மூன்றன் தொகையே யாகும். பிற்காலத்தார் இறுதிப் பண்பையே வினைப் பயன் என்றனர். திருவள்ளுவர் கருத்துப்படி அது முற்பிறப்பின் பயனன்று, முந்திய தலைமுறையின் பயன். ‘தெய்வம்' என்பது ஊழின் முதற் கூறாகிய இயற்கை யாற்றல். எனவேதான், திருவள்ளுவர் அதை ஊழ், இயற்கை யாற்றலின் உருவங்களான சிறு தெய்வங்கள், இயற்கையாற்றல் போல ஆற்றல் உடையவன் என்ற மூன்று பொருள்களில் வழங்கியுள்ளார். இவ் வேறுபாடுகளைப் பரிமேலழகர் உய்த்துணர்ந்துள்ளார்.ஏனெனில், சமற்கிருதத்தில் தெய்வம் (தைவம்) என்பதன் பொருள் இன்றும் ‘தற்செயல் நிகழ்வு,' 'இயற்கையாற்றல்' என்ற இரண்டுமே, சமற்கிருத அகரவரிசை தரும் பொருள்கூட இவையே.

தமிழ் இழந்துவிட்ட முன்னைப் பொருளை முற்காலத் திலிருந்தே தமிழிலிருந்து இச்சொற்களை மேற்கொண்ட சமற்கிருதம் இன்னும் காத்து வருகிறது.

சமற்கிருதம் பழம் பொருள் சுட்டிக் காட்டுமிடங்களில் பரிமேலழகர் ஏனைய உரையாசிரியர் கடந்து அவ்வப்போது தம் சமற்கிருதப் பேரறிவால் மெய்ப் பொருள் காண்கின்றார் அல்லது உய்த்துணர்கின்றார். சமற்கிருதப் பிற்காலச் சமற்கிருதக் கருத்துகளைத் திணிக்கும் போதுமே அவர் யாவும் பிறழக் காண நேர்கிறது என்று காணலாம்.

பரிமேலழகரின் பண்பு

பரிமேலழகர் பெருவழக்காகப் போற்றப்பட்டு வந்ததற்கு நேர்மையான காரணங்களும் உண்டு; இயல்பான காரணங்களும் உண்டு. முந்தியவை அவர் தனிப்பட்ட நற்பண்புகள் சார்ந்தவை.