தென்மொழி
195
வழங்கியும் அவரைப் பெருமைப்படுத்தி யுள்ளன. திருக்குறள் சங்க காலத்திலோ, அதற்கு முற்பட்டோ இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது.
திருக்குறள் பிற சங்க நூல்கள் கடந்து பெருமைபெற்ற பருநூல். ஆயினும், அது சங்க நூல்களுள் ஒன்றாகவே குறிக்கப்பட்டுள்ளது. சங்கத் தொகை, பத்துப் பாட்டு என்றும், எட்டுத் தொகை என்றும் பதினெண்கீழ்க் கணக்கு என்றும் வகுத்துள்ளனர். இவற்றுள் திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வகுக்கப்பட்ட 18 நூல்களுள் ஒன்று ஆகும்.
“நாலடி, நான்மணி, நால் நாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம் மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைந்நிலையவாம் கீழ்க் கணக்கு
'முப்பால்' என்ற பெயரால் இவ்வெண்பாவில் திருக்குறள் குறிக்கப் பட்டுள்ளது.
சங்கப் பாடல்களின் பெருந்தொகுதி இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுக்கு உட்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியக் கதையின் காலமும், காவியக் காலமும் இதனை அடுத்ததே. ஆனால், சங்கப் பாடல்களுள் சில அக்கால நூல்களுடன் தொகுக்கப்பட்டாலும், அக்காலத்துக்கு மிகவும் முற்பட்ட பழைமையுடையன ஆகும். திருக்குறள் கடைச்சங்க காலத்திய நூலானால், பெரும்பகுதி பாடல் களுக்குரிய இரண்டு மூன்றாம் நூற்றாண்டுக்கு மிக முற்பட்ட தாகவே இருத்தல் வேண்டும்.
திருக்குறள் என்ற நூற்பெயரோ, அதன் ஆசிரியர் பெயரோ சுட்டியும் சுட்டாமலும் அவர் கருத்தை மேற்கொண்டு கூறிய கீழ்வரும் சங்க காலப் பாடல்கள், சங்க காலத்தை அடுத்த சிலப்பதிகார மணிமேகலைக் குறிப்புகள் இதனைத் தெளிவுபடக் காட்டும்.
செங்களம் துழவுவோன் சிதைந்து வேறாகிய படுமகள் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே
- புறம் 278