தென்மொழி
தமிழகப் பின்னணி
205
திருக்குறளைப் பொதுமறை, உலகப் பொதுமறை என்றும், திருவள்ளுவரை உலகப் பொது அறிஞர் என்றும் பாராட்டுவ துண்டு. ஆனால், அதுவே தமிழ் மறை என்பதையும் அவரே தமிழ்ப் பண்பை முக்காலத்துக்கும் உரியதாக வகுத்தவர் என்பதையும் நாம் மறந்துவிடல் தகாது.
கவ
திருவள்ளுவர் உலகுக்குரியவர். அவர் தமிழரிடையே பிறந்து தமிழில் திருக்குறள் எழுத நேர்ந்தது தமிழர் நற்பேறு என்று யாராவது கூறினால், வள்ளுவரைப் பாராட்டிய அளவில் அஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால், அதை அப்படியே உண்மையாகக் கொள்வது தமிழ்க்குப் பெருமையோ நேர்மையோ ஆகாது. அஃது உண்மையும் அன்று.
தெலுங்கர் தமிழரை 'அரவர்' என்பர். இதற்கு உண்மை யான தோற்ற மூலம் தெலுங்கு நாட்டின் தென் எல்லையிலும், தமிழகத்தின் வட எல்லையிலும் இருந்த மக்களும் நாடும் அருவாளர் என்றும், அருவா நாடு என்றும் முன்பு வழங்கப் பட்டதே யாகும். இதனை உற்றுக் காணாத நிலையில் அறிஞர் கால்டுவெல் அதை ‘அறவர்’, நீதிக் கோட்பாட்டாளர் என்று கூறுகிறார். இது சொல்லாராய்ச்சி முறையில் சரியல்லவாயினும் தமிழர் பண்புக்குப் பொருந்துவதே யாகும்.
ஆனால், கால்டுவெல் ஓரளவு வேடிக்கையாகத் தெலுங்கர் சிலர் கூறும் வேறு பொருள்களையும் சுட்டிக் காட்டுகிறார். அரவம் அல்லது ஓசை என்பதன் சமற்கிருதப் பதம் ரவம். சமற்கிருதத்தில் அரவம் இதன் எதிர்மறை. ஓசை யில்லாதது அல்லது இனிமையாக இல்லாத ஓசை என்பது அதன் சமற்கிருதப் பொருள். இது குறும்பினால் புனைந்துகொண்ட பொருள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்னொரு விசித்திரப் பொருளும் தரப்படுகிறது. இஃது அறவர் அறநூலுடையோர் என்பதை ஏற்கின்றது. ஆனால், தமிழரிடம் ஒழுக்க நூல் நிறைந்திருப்பதற்குக் காரணம் தமிழரிடம் ஒழுக்கம் குறைவாயிருப்பதே, அவர்களைத் திருத்த ஒழுக்க நூல்கள் மிகுதியும் தேவையாயிருந்தன என்று கூறப்படுகிறதாம்!