பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

(209

ஆங்கில ஆட்சி முடிவில்! இத்தொகையில் எல்லா மாவட்டங் களும் ஒத்த இடம் பெறமாட்டா என்பதும், ஒன்றிரண்டு குலத்தினர், அவரினும் உழையாத ஒரு சிறுபான்மை வகுப்பினரே இடம் பெறுவர் என்பதும் கவனிக்கத்தக்க நிலைகள்.

இன்று நம் பெண்டிர் நிலையோ கேட்க வேண்டியதில்லை. நாட்டில் ஆடவர் விழுக்காடுகூட, உயர் வகுப்பில் அவர்களுக்குத் தேறாது.

கம்பர் கால நிலையை இதனுடன் ஒப்பிட நமக்கு வாய்ப்பில்லை. அந்நாளைய விழுக்காட்டை நாம் அறிய முடியாது. ஆனால், அது சோழப் பேரரசர் காலம்; கவிச் சக்கரவர்த்தியின் காலம். அந்தச் சக்கரவர்த்திகளுடன் போட்டியிடும் ஓர் அவ்வையார், அவர்க்குக் குறையாத கல்வியறிவுடைய பிற மாதரசியர் இருந்தனர். இஃது இன்றைய தமிழகத்தில் காட்டமுடியாத ஒன்று என்று கூறத் தேவையில்லை. பிற நாடுகளில்கூட அரிதான நிலையே இது!

உயர்

கம்பராமாயணம், தேவார திருவாசகங்கள் வகுப்பினர்க்காக, புலவர்க்காக எழுந்த இலக்கியமல்ல. பள்ளி மாணவர்க்காக எழுந்த இலக்கியம் கூட அல்ல. பொது மக்களிடையே சமயப் பிரச்சாரத்துக்காக எழுந்தவை அவை.

இதனால் இன்றையக் கல்விநிலையைவிட அன்றைய நிலை உயர்ந்த தென்பதை உய்த்தறியலாம். மதிப்பீட்டைக் குத்தாய மாகக் கூறுவதானால், இன்றைய 100-க்கு 15 விழுக்காடு அன்று கட்டாயமாக 45 விழுக்காடாவது இருக்கக்கூடும் என்னலாம்.

சங்க நூல்களால் அக்காலத்துத் தலைசிறந்த பாடல்களைப் பாடிய புலவர்களுள் ஒரு பகுதியினரை மட்டுமே நாம் அறிகிறோம். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளிலுள்ள புலவர்களாக இவ்வகையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர்களைக் காண்கிறோம். அது மட்டுமோ? அவர்கள் அன்றைய தமிழகத்துக்குப் பிரதிநிதிகளாக அமைந்ததுபோலத் தமிழகத்திலோ பிற நாடுகளிலோ இன்றுவரை எங்கும் ஒரு சிறிதும் அமைந்ததில்லை. ஏனென்றால், பெயர் ஊர் தெரிந்த வரிடையிலேயே இன்றைய தமிழகத்தின் எல்லா மாவட்டத்தின்