218
அப்பாத்துரையம் - 2
என்ற வரலாற்றுண்மை கண்டே அவர் கன்னித்தாய்க் கருத்தைத் கட்டுரைத்தார்.
பேராசிரியர் நாளில் சங்க இலக்கியம் முற்றிலும் வெளிவரவில்லை. அவற்றின் காலவரையறை உணரப்படவில்லை. சிந்துவெளி நாகரிகம் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் பத்திலேயே அகழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இருபதாம் நூற்றாண்டில் ஒரு மறைமலையடிகள் கண்டு நிலைநாட்ட வேண்டிய கருத்தையெல்லாம் முன் நூற்றாண்டிலேயே கண்டு கவிதைக் கருத்தாகத் தந்தார் சுந்தரனார்.
ய
உலகின் செம்மொழிகளுள் சமற்கிருதம் மட்டுமன்று, பழம் பாரசீகம், பண்டை கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், அரபு, ஐஸ்லாண்டிக் ஆகிய யாவுமே வழக்கிறந்துபட்டன. அது மட்டுமன்று. இவற்றினும் பழைமையான நாகரிகம் வளர்த்த பண்டை எகிப்திய மொழி, சிரிய மொழி, பினீசிய மொழி, அசீரிய, பாபிலோனிய மொழிகள் ஆகியவையும் இவற்றுக்கு மூல நாகரிக மொழிகளான வரலாற்றுக்கு முற்பட்ட சுமேரிய, ஏலமிய மொழிகளும் மரபும் தடமுமற்று ஒழிந்து போயின.
உலகின் மிகப் பழைமை வாய்ந்த மொழிகளுள் இன்னும் உயிருடன் நிலவுபவை தமிழ்மொழியும் சீன மொழியும் மட்டுமே. அறிஞர் அறிவுடன் கவிஞர் முன்னறிவும் இணைந்த பேராசிரியர் முடிவு வியக்கத்தக்க ஒன்றே யாகும்.
வட இந்தியாவின் படிப்பினை
அசோகன் காலத்துக்கு முன்னிருந்து இன்றுவரை இந்தியாவில் இலக்கிய மொழியாக நிலவுவது தமிழ் ஒன்றே. ஆனால், இந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்குள் வட இந்தியாவில் எழுந்தெழுந்து மறைந்த மொழித் தலைமுறைகள் மிகப்பல. வட இந்திய ஆரியரின் மிகப்பழைமை வாய்ந்த மொழி வேதமொழி. இது கி.மு.8ஆம் நூற்றாண்டுக்குள்ளேயே இறந்துவிட்டது. இதிகாச மொழி இதன் பின் எழுந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குள் அதே நிலை கண்டது. புத்தர், மகாவீரர் காலங்களில் பாலியும் அதனையடுத்து அர்த்தமாகதிப் பிராகிருதமும் புத்த, சமண இலக்கிய மொழிகளாய் நிலவின. கி.பி.