பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

(221

பெற்றுள்ளது. அதன் உயிர்ப்பண்பின் மறை திறவுக்குரிய ஒரு பண்புக்கூறு இது.

ஆனால், நீடித்த வாழ்வுக்கே உயிர்ப் பண்பு காரணமாகும். ஆகவே, நீடித்த வாழ்வு, உயிர்ப் பண்பு இரண்டுமே ஒன்றற் கொன்று முதற் காரணமாகமாட்டா. ஒன்றற்கொன்று காரணமாகவும் காரியமாகவும் இணைந்து வரும் பண்புகளே யாகும்.

வாழ்வு, தாழ்வுப் பண்புகள்

தமிழ் மொழியின் உயிர்ப்பண்பு, நீடித்த வாழ்வு, நிலையான இன நலம் ஆகியவற்றின் மூல காரணம் தமிழின இயற்கையோ டொட்டிய வாழ்வே என்னலாம். ஆனால் வேளிர், மூவேந்தர் பொதுவாகவும், பாண்டியர் சிறப்பாகவும் அதற்குத் திட்டமமைத்துச் சங்க வாழ்வால் வளர்த்ததே அதன் நீடித்த வாழ்வுக்குப் பெரிதும் உதவிற்று என்னலாம். சங்க வாழ்வு, இலக்கியத்தைத் தோற்றுவிக்கவும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கவும் மட்டும் அமைந்த நிலைய மன்று. அதுவே தமிழகத்தின் தேசியப் பல்கலைக் கழகமாகவும் அமைந்தது.பாண்டியருடன் அரசியலில் போட்டியிட்ட சேர சோழரும் வேளிரும், மொழித்துறையில் பாண்டி நாட்டின் சங்கத் தலைமையை ஏற்றதன் காரணம் இதுவே.

அரசர் வாழ்வு கடந்த தேசியக் குறிக்கோள் கண்ட தமிழினத்தார் அரசனை ஆட்சிக் காவலனாக மட்டுமே கொண்டிருந்தனர். ஆட்சி முறையில் அடிப்படை குடியாட்சி யாகவும் சிறு குடியரசுகளின் நாட்டாண்மை, ஊராண்மை நகராண்மைகளாகவும் வகுக்கப்பட்டது. இதற்கென மூவாயிர ஆண்டுகட்கு முற்பட்டே கோட்டம் (ஜில்லா), கூற்றம் (தாலுக்கா), வளநாடு (வட்டம்), நாடு (நகர்-நாடு அல்லது பேரூர் சூழ்ந்த சிற்றூர்த் தொகுதி) ஆகியவற்றை வகுத்திருந்தனர்.

தமிழரின் ஆட்சி முறையும் கல்வி முறையும் தமிழரசர் காலம் முழுதும் அவர்கள் போர்களாலும் ஆட்சி மாறுதல்களாலும் பாதிக்கப் பெறாமல் நீடித்தன. ஆனால், சங்க வாழ்வு கி.பி. 3ஆம் நூற்றாண்டுடன் ஓய்வுற்றது. தமிழ்க் கல்வி நிலையங்கள் படிப்படியாக அழிவுற்று, சமற்கிருதக் கல்வி