பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

225

சங்கரர், இராமானுஜர், இராமானந்தர் முதலிய சமயாச்சாரியர் விழுமிய கருத்துகளுக்கும், அவர்கள் மூலமாகச் சைதன்னியர், ஞானதேவர் ஆகியவர்கள் சமயப் பண்புக்கும்’ இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த அடிகள், காந்தியடிகள் ஆகியோரின் அருட் பண்புகளுக்கும் உரிய தாய் மூலத்தைத் திருக்குறளில்தான் காணமுடியுமே யன்றி வேத புராண இதிகாசங்களில் காணமுடியாது என்று ஷ்வைட்சர் கருதுகிறார்.

உலகப் பழைமையாராய்ச்சித் தொகுதி (Archaeology) இந்தியப் பண்பாராய்ச்சித் தொகுதியும் (Indology) தமிழ்ப் பண்பாராய்ச்சித் தொகுதியும் (Tamilology) குறுகிய ஆரிய மனப்பான்மை, குறுகிய வெள்ளையர் ஆதிக்க மனப்பான்மை ஆகியவையன்றி நடுநிலையாக முழுதுறழ்வாக ஆயப்படும் நாளில், தமிழ்ப் பண்பாட்டின் விரிவே உலக மறுமலர்ச்சியாய், சங்க முத்தமிழின் ஆய்வே உலகின் புத்திலக்கிய வழிகாட்டியாய், வள்ளுவர் வழிவந்த அறிவு நூலே, அன்போடியைந்த ஆக்க அறிவு நூலாய்த் திகழும் என்னலாம்.