230 ||
அப்பாத்துரையம் - 2
மூதாதையர்களான வெள்ளைக்காரன் வைத்த பெயர், மதராஸ் என்னும் பண்டைக்காலப் பெயரே இருக்கட்டும் என்று கூறும் வரலாற்று மணம் காணாத போலித் தேசியக் குரல் -தேசியப் போர்வை போர்த்த தன்னல நச்சுக்குரல்- ஆட்சியிலிருந்து கொண்டு சட்டத்தைத் தங்கள் அட்டூழியங்களுக்கான காவற் கோட்டை யாக்கிவரும் குரல் - தேசத்தின் கொடி என்று தாங்கள் ஏற்றிவைத்த கொடியையே தங்கள் கட்சிக் கொடி என்றும் கூறிக் கட்சிப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி அவமதித்துவரும் குரல் இதுவே!
'தமிழ் நாடாவது, வெங்காய நாடாவது! தேவிகுளம் பீர்மேட்டைத் தமிழன் ஆண்டால் என்ன, எவன் ஆண்டால் என்ன? இதுகள் அப்பன் சொத்துகளா அவை'? என்று கேட்கிற, கேட்பவரைத் துதிபாடி எத்திப் பிழைக்கிற குரல் ஒரு புறம் தமிழனைப் பார்த்து அகம்பாவ ஆணவத்துடன் சீறி அவமதிப்பாகப் பேசிக் கொண்டு மறுபுறம் ஆட்சியிலிருக்கும் அயலானிடம் கெஞ்சி மண்டியிட்டுக் கூத்தாடும் பண்புடைய இருமுகம்படைத்த இக்கலியுகத் தெய்வங்களின் குரல் - ஏங்கிய; தமிழனை ஏவி, தூங்கிய தமிழன் முதுகில் கயிறு திரித்தது போதும், தமிழன் இனியாவது விழித்தெழுதல் வேண்டும்!
தமிழன் உரிமையை நசுக்கிவரும் இந்தக் குரலைத் தமிழன் எத்தனை நாள் வைத்துப் பேணித் தன் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கப் போகிறான்? பகுத்தறிவு மிக்க வீரன் கூறினான், தேவைப்பட்டால், 'கொலைவாளினை எடு' என்று. ஆனால், அஃது எதிரியை எதிர்ப்பதற்கான செயல் மட்டுமே! இங்கேயோ, நம் முதல் எதிரி நம் செயலின்மையே! செயல் செய்து உரிமை பெறுவதற்கு வாளும் தடியும், வில்லும் வேலும், துப்பாக்கியும் குண்டும் எதுவும் பயன்படமாட்டா! ஆகவே, தன்மான வாளை எடு! தன் உரிமை மொழியைத் தன் இனத்துக்கே, இனத்தின் பிரதிநிதிக்கே, இனத்துக்குப் பாடுபட்டு, உலகில் இனத்துக்கு இடந் தேடுபவனுக்கே கொடு - இதுதான் இன்றைய தமிழனின் தேவை!
உன் கடமை இது, தமிழனே! உன் உரிமையும் இதுதான்!
கிளர்ந்தெழு, ஒன்றுபட்டெழு! குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக - ஊர் ஊராக, மாவட்டம் மாவட்டமாக