இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழன் உரிமை
(231
அலை அலையாகத் தமிழர் குரல் எழுப்பித் தமிழ்க் கடலாகப் பொங்கி எழு!
தமிழர் தன்னுரிமை வாழ்வு பெற, தன்மான ஆட்சியமைய உன் நெஞ்சின் உறுதி தாங்கிய நாவின்மொழி, நாவின் உறுதிமொழி தாங்கிய உரிமை மொழிச் சீட்டைக் கைக்கொள்! அதையே உன் புது வாழ்வுக்குரிய உரிமை வாளாகக் கொண்டு வெற்றி பெறுவாயாக!
நீ வாழ, உன் இனம் வாழ, உன் வழிமரபு வளம்பெற, நீ செய்ய வேண்டிய கடமை, பெறவேண்டிய உரிமை இதுவே!