பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. இன வாழ்வு

கடமை உண்டு, உடைமைகூட மைகூட உண்டு உனக்கு, தமிழனே! ஆனால், உரிமை உண்டா?

கடமையும் உடைமையும் உடைபோன்றவை. உள்ளே உயிருருவம் இல்லாமல், குற்றிக் கட்டையின்மீது உடையும் செருப்பும் தொப்பியும் மாட்டி வைத்திருக்கிறார்களே, கொல்லைகளில்! அது போன்ற உடையணி, உடையணி ஆகுமா! அல்ல, துணிமணிக் கடைகளில் அழகான பொம்மைகளின் மீது அவற்றை நாகரிகமாகக் கட்டியிருக்கிறார்களே, அதுதான் உண்மை உயிர் அழகாகுமா?

கடமை, உரிமை என்ற சொற்கள் தமிழில் உண்டு. ஆனால், தமிழன் வாழ்வில் அச்சொற்கள் குறிக்கும் பண்புகள் மேற்கூறிய உடையுருவங்கள் பெற்றவையே. ஏனென்றால், 'இனவாழ்வு' என்ற உயிருருவத்துடன் இணைந்தே அவை பொருளும் பண்பும், அழகும் வளமும் பெறுபவை.

உரிமை, கடமை என்ற இரண்டு சொற்களுமே இனம்சார்ந்த சொற்கள். இனத்தின் தன்மை அறியாதவர்களுக்கு அந்தச் சொற்கள் பொருளற்றவை. இனவாழ்வற்றவர்களுக்கு, அந்தச் சொற்கள் கழுதை சுமக்கும் வெல்லப் பொதிகள் போல, இனிமையற்றவை, பாரமாக மட்டும் அமைபவை, இயங்குபவை.

உரிமை என்றால் என்ன? - தனி மனிதன் வாழ்வு!

கடமை என்றால் என்ன? - இனப் பொது வாழ்வு!

தனி மனிதன் இனத்துக்காக வாழ்கிறான். தான் மாளும்போதும் இனத்தை வளர்த்து, இனத்துக்காகவே கவலைப்பட்டுக்கொண்டு இறக்கிறான். இஃது அவனது கடமை.