பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

235

குடி, குலம், சமுதாயம், ஊர்,நாடு ஆகிய எல்லைகள் தாண்டி உலகமாக விரிவுறுவது. இந்த எல்லா எல்லைகளிலும் அது புதுப்புது அலைகளாக ன மரபின் உயிர்ப்பு ஊட்டிக் கால

எல்லை தாண்டி வளர்வது.

அலை வளர்ச்சி, அலை மரபு ஆகிய இரண்டின் வளமும் விழுந்த கல்லின் ஆற்றல் அளவேயாகும். அதுபோல, இனத்தின் பரப்பு வளர்ச்சி, மரபு வளர்ச்சி ஆகியவையும் இனவாழ்வின் வளமும் அந்த இனப் பண்பின் வளத்தைப் பொறுத்ததேயாகும்.

தமிழினம் உலகின் எல்லா இனங்களுக்கும் தலைமூத்த தாய் இனம். அதன் பண்பு எல்லா இனப் பண்புகளையும்விட உரமிக்கது. இனப் பண்புகட்கு மூல உயிர் வேராய், அவற்றை முற்காலத்திலும் வளர்த்து, இன்றும் வளர்த்து, இனியும் வளர்க்கவேண்டுவது அதுவே.

இத்தகைய இனத்தில் நீ பிறந்திருக்கிறாய் தமிழா! உன் உரிமை மிகமிகப் பெரிது. உன் கடமையும் பொறுப்பும் அதன் அளவேயாகும். ஆகவே, நீ உன் உரிமை பேணாவிட்டால், நீ இழப்பது உன் உரிமை மட்டுமன்று. வருங்கால உலகின் உரிமையையே நீ அழிப்பவனாவாய் - வருங்கால மனிதப் பெரும் பேரினத்தின் வாழ்வையே உன் அறியாமையால் நெகிழவிட்டவன் ஆய்விடுவாய்! இயற்கை உன் இனத்தின் கையில் - உன் கையில், எவர்க்கும் தராத பெருஞ் செல்வத்தை நம்பி அளித்திருக்கிறது. உன் செல்வத் தந்தை உன் கையில் ஒப்படைத்த தங்கத்தின் மதிப்பறியாமல், அதைக் கொடுத்துப் பக்கத்து வீட்டுப் பஞ்சையிடம் வங்கத்தை வாங்கி நீ பங்கமடையலாமா? அதுவும் பக்கத்து வீட்டுப் பஞ்சை நல்லறிவுடைய பஞ்சையல்லவே - உன் தங்கத்தைக் கொண்டு அந்தப் பேதை நஞ்சு உண்டுபண்ணி, அதை அமுதமென்று உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் மட்டுமன்றி, தனக்கும் தன் பெண்டுபிள்ளைகளுக்கும், உன் தோழர், தன் தோழர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்க்கும், கொடுத்து எல்லாரையும் கூட்டோடு கயிலாயத்துக்கு அனுப்பப் பாடுபடும் அறிவிலாப் பஞ்சையாயிற்றே!

இதை நீ எண்ணிப் பார் தமிழா!