பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

237

எருமையாட்சியின் வாலைப் பிடித்து நீரடி காணவா எண்ணுகிறாய், தமிழா?

எழு! விழித்தெழு! உன் இனப் பண்பின் உயிர்த்துடிப்பால் உலகுக்குப் புத்துயிர் அளிக்க உன் உரிமைக்குரல் எழுப்பு! உன் உரிமை மொழிச் சீட்டை இன்று உன் வாழ்வு மலர்ச்சிக்குப் பயன்படுத்தி, நாளைய உலக மக்கள் நன்றிக்கு ஆளாகு! இத்தனைக்கும் உதவத்தக்க உயிர்க் கருவி, உன் கைச் சீட்டு! அதை, உன் குடிஉரிமைச் சின்னத்தை உன் இன உரிமைத் திறவுகோலை, இன வாழ்வின் வித்தை, உன் இனத்தை ஓர் இனமாக மதிக்காத, அடிமை இனமாக வைத்து நடத்த விரும்புகிற ஓர் அயலினஆட்சியை வலுப்படுத்தும் வகையில் பயன்படுத்தாதே - அதை அயலினத்துக்கு விற்காதே, வீணாக்காதே!

வித்து நெல்லை விற்கிற அல்லது உண்கிற தொலையறிவற்ற உழவனைப் போல, உன் உரிமையை, இனவாழ்வை நீயே மனமாரப் பறிகொடுக்காதே! உன் உரிமைச் சீட்டை உன் உரிமைக்காக, உனக்குப் பிரதிநிதியாக நின்று போராடுபவர்க்கே பயன்படுத்து!