பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

239

குடும்பஇனம் கடந்து, நாம் மொழியினத்தைக் காண்பது போல, மொழியினம் கடந்து பல சமயம் மொழிக்குழுஇனமும் பண்பாட்டினமும் காண்கிறோம். செடியில் முதிர்ந்த வித்துகள் வேறு பல செடிகளாக வளர்ந்து செடியினம் வளர்ப்பதுபோல, மொழிஎல்லையில் நீடித்து நின்ற முதிர்ந்த பண்புகள் மொழி கடந்து வளர்கின்றன. மொழி கடந்த பண்பினம் வளர்க்கின்றன. மொழி கடந்த இந்தப் பண்பினத்துக்குள்ளேயே மொழிப் பண்பினமும் இருப்பதுண்டு. தமிழ் மொழி எல்லை கடந்த இந்த மொழிப் பண்பினம் அல்லது மொழிக்குழுவினத்தையே பண்டைத் தமிழர் தமிழகம் என்று வழங்கினர். நாம் இப்போது மலையாள நாடு, தெலுங்கு நாடு, கன்னடநாடு, துளுநாடு என்று வகுத்துக் காண்பவை அனைத்தும் சங்க காலத்திலே ஒரே தமிழகமாகத்தான் இருந்தது. ஆனால், தமிழகம் குறுகிவரத் தொடங்கியபோது, அவர்கள் குறுகிய தமிழகத்தைச் ‘செந்தமிழகம்’ அல்லது ‘தமிழ் கூறும் நல்லுலகு' என்றனர். பரந்த மொழி எல்லையை இதற்கெதிராகச் சில சமயம் ‘முத்தமிழகம்', ‘பெருந்தமிழகம்' அல்லது 'தமிழுலகு' என்றனர்.

இச்சொற்கள் இன்று மரபிழந்த, முன்னைய பொருள் எல்லை காட்டாமல் மயக்கம் தருகின்றன. ஏனெனில், பழைய செந்தமிழகத்தையே நாம் இன்று தமிழுலகம் என்று கூறவேண்டிவர்களாயிருக்கிறோம். இதன் ஒரு பகுதியை ஆனால், பெரும்பகுதியையே - நாம் தமிழகம் என்கிறோம். பலர் திருவேங்கட முதல் தென் கன்னியாகுமரி வரையுள்ள எல்லை மட்டுமன்று, வட இலங்கையும் பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்விரண்டையும் சேர்த்து நாம் இன்று பெருந்தமிழகம் என்றும், தமிழர் வாழும் பிற உலகப் பகுதிகளை அவற்றுடன் சேர்த்துத் தமிழுலகம் என்றும் கூறலாம். கூறலாம். ஆனால், இன்றைய தமிழுலகமே பழந்தமிழகத்தை முழுதும் குறிக்கவில்லை. ஏனெனில், மலையாள, தெலுங்கு, கன்னடப் பகுதிகள் பழந்தமிழகத்தின் பகுதிகளான தமிழின நாடுகளே.

தமிழகத்தை உள்ளடக்கிய தமிழின நாடுகளின் பரப்பை, முற்கால சமற்கிருதவாணரும் தற்கால உலக அறிஞரும் ‘திராவிடம்' என்ற பெயரால் வழங்கினர். இதனைத் ‘தமிழகம்’