பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. மொழி உரிமை

இந்தியாவின் தாய்மொழிகள் நூற்றுக்கணக்கானவை என்று கூறப்பட்டாலும், முக்கியமானவை ஓர் இருபதுதான். இவற்றுள் வடமேற்கில் சிந்து வெளியில் உள்ள மொழிகள் பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இறுதிக் காலத்திலேயே இலக்கிய வடிவும் மொழியுருவும் பெறத் தொடங்கியுள்ளன. தவிர, ஆரிய இன மொழிகள் அனைத்துமே பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சற்று முற்பட்டே இலக்கிய வடிவமும், மொழி வடிவமும், மொழிப் பெயரும் பெற்றன. உண்மையில், பாரத நாடு பழம்பெரு நாடு என்றும், பிரிட்டன் புதிய தற்கால நாகரிக நாடு என்றும் கூறப்படுகிறதானாலும், இலக்கிய வகையில் பிரிட்டன்தான் பழம்பெரு நாடு. பண்டை இலக்கிய வளமுடைய நாடு.பாரத நாடு தென்னாட்டை நீக்கிப் பார்த்தால் ஆங்கில நாட்டைவிடக்கூட மிகப் புத்தம் புதிய நாடு என்னலாம்.

பாரத தேசத்தின் வடபகுதியைக் காட்டிலும், உலகின் மற்றெப் பகுதியைக் காட்டிலும் பன்மடங்கு பழம்பெருமையும் வளமும் வாய்ந்த இலக்கியமுடையது தென்னாடு. உண்மையில் சமற்கிருதத்தின் பழைமைகூடத் தென்னாட்டரசர் பேரரசர்கள் - சிறப்பாக ஆந்திரர், சாளுக்கியர், பல்லவர், கங்கர் - தாய்மொழி பேணாமல் பாளி சமற்கிருத மொழிகள் பேணியதன் பயனே யாகும். அப்படியும் மலையாளம், தெலுங்கு, கன்னடமொழிகள் கிட்டத்தட்ட சமற்கிருதத்துடன் ஒத்த பழம்பெருமை உடைய இலக்கிய மொழிகளேயாகும். தமிழோ பிற தென்னாட்டு மொழிகளையும் சமற்கிருதத்தையும் கடந்த மிகப்பெரிய இலக்கியப் பழைமை யுடையது.

பாரத தேசத்திலே ங்ஙனம் பழம்பெருமைக்குரிய தாய்மொழி தமிழாக இருக்க, பாரதத்தின் பழம்பெருமையே