தமிழன் உரிமை
261
போராடிக்கொண்டே தான் இருத்தல் வேண்டும். ஒரு கணம் போராடத் தயங்கினால், அல்லது போராட்டம் தளர்ச்சி யடைந்தால் - போராட்டத்தில் மக்கள் சத்தி ஒன்றுபடாமல் பிளவுபட்டால்கூட வடமொழிப் பற்றாகிய ஏகாதிபத்தியச் சத்தி, நெடுந்தொலை அழிவுத்திசை நோக்கி வளர்ந்துவிடும்.
மக்கள் உரிமை பேணும் அறிஞர், நல்ல தமிழார்வ அறிஞர் விளக்கினாலல்லாமல், ஏகாதிபத்தியப் போக்கையும், வடமொழிப் பற்றாளர் போக்கையும் மக்கள் தாமே எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில், முன் இரு சத்திகளும் பல உரு எடுப்பவை மட்டுமல்ல, அவை தம் கோரத் திட்டங்களைச் சிறு சிறு கூறுகளாக்கி, படிகளாக்கி, மெல்ல மெல்ல, ஆனால் நீண்ட காலத்திட்டத்துடன் கொண்டு வருவர். ஒவ்வொரு கூறுகளையும் தனித்தனி காணும் மக்கள், திட்டத்தின் கோர அழிவை ஒரு சிறிதும் காண முடியாமல் ஏமாறுவர். உண்மை நூலில் சிப்பு நூல் இ ணைத்து, சிப்பு நூல்வழி நூல்கயிறு, நூல்கயிறு வழி வடம், வடத்தின் வழி நூலேணி ஏற்றும் கதை ஒன்று உண்டு. இதன் ஒவ்வொரு படியிலும் காண்பவர் ஒரு சிறு சூதற்ற செயல் காண்பரேயன்றி, இறுதியாக நூலேணி ஏற்றப்படுவதை மனங்கொள்ளமாட்டார். வடமொழிப் பற்றாளர் செயலில் மக்கள் எளிதில் மயங்குவதன் வகை இது. இதனை மரபறாது நின்றபடி நாளும் விளக்கும் அறிஞர் பொறுப்பு பெரிது. மரபறாதிருத்தலும் அரிது. ஏனென்றால், ஏகாதிபத்தியம், வடமொழிப்பற்று ஆட்சியிலிருந்துகொண்டு அவர்களை அழித்துக் கங்காணி அறிஞர் மரபையே வளர்க்கும்.
தாய்மொழிப் பண்பு இந்தியாவின் மற்றெல்லாத் தாய்மொழிகளிலும், தமிழின மொழிகளில்கூட, ஓரளவு தளர்ந்து விட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் அல்லது தாய்மொழிப் பண்பு வாய்ந்த தமிழ் ஆசிரியர் மறைமலை அடிகளின் தளராப் போராட்டம் காரணமாக, மக்கள் வாழ்விலும், ஆட்சித்துறை, செயலாக்குத் துறைகளில் அதன் எதிர்ப்பே நெடுங்காலம் தலைதூக்கி ஆடிவருகிறது. தொடர்ந்த அயலாட்சிகள், அயல்மொழிஆட்சிகள், அயல்பண்பாட்சிகள், இதற்கு உகந்த சூழல்களாயுள்ளன. இப்போது மக்களிடையேயும், இலக்கிய வாழ்விலேயும் தனித்தமிழ் அடைந்து வந்த வெற்றியைக்