தமிழன் உரிமை
இர
263
வாழும் மொழி, வாழ்வளிக்கும் மொழி என்ற இந்த ரண்டு வகையினும் தமிழ்க்கு நேர்மாறான இயல்புடையது வடமொழி. அது பிறக்கும்போதே உயிர்ப்பாற்றலற்ற
மொழியாகப் பிறந்தது. அதன் இலக்கிய வாழ்வுகூட ஒரு நான்கு நூற்றாண்டுகளே உயிர் வளர்ச்சி பெற்றிருந்தது. அதற்கு முற்பட்ட அதன் தாய் மொழிகளான வேதமொழி, பாளி ஆகிய முன் தலை முறைகளும் அதற்குப் பிற்பட்ட பாகதங்கள், அபப்பிரும்சங்கள், தற்காலத் தாய்மொழிகள் ஆகிய பின் தலைமுறைகளும் எவையும் இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாழ்வுடையனவாய் இயங்கவில்லை. இங்ஙனம் வடமொழியின் மரபும் தொடர்பும் கலப்பும் ஒவ்வொரு படியிலும் அம்மரபுக்கோ, தொடர்புக்கோ, கலப்புக்கோ உரிய மொழிகளை வாழா மொழிக களாகவே ஆக்கியுள்ளன.
இங்ஙனம் வாழும் மொழி, வாழ்வளிக்கும் மொழியாகிய தமிழில், வாழா மொழி, வாழ்வு கெடுக்கும் மொழியாகிய வடமொழியின் நான்கு எழுத்துகளைப் புகுத்தீடு செய்வதற்கான தேவை, அவசியம் என்ன? தமிழ்மொழி ஆட்சிக்குழு, அவ்வாறு செய்ய விரும்புவானேன்? அவ்வாட்சிக்குழு தம் நீண்ட காலத் திட்டத்தின் ஒருபடி என்ற முறையிலேயே அதற்கு ஆதரவு தர விதிர்விதிர்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் வடமொழிப் பற்றாளரும் இப்புகுத்தீட்டுக்குக் கூறும் நியாய ஆதாரங்கள், வாதங்கள், காரண காரிய விளக்கங்கள் எவை? அவை நேர்மையானவையா, தமிழர் நலங்களுக்கு ஏற்றவையா, தமிழர்
பண்பாட்டை வளர்ப்பவையா?
இவையே இப்போது நம்முன் உள்ள ஐயப்பாடும் கேள்விகளுமாகும்.
முதலாவதாக : பிறமொழிச் சொற்களைத் தமிழில் திருத்தமாக எழுதவும் படிக்கவும் இவ்வெழுத்துகள் தேவை, அல்லது இன்றியமையாதவை என்று கூறப்படலாம்.
(அ) இங்கே வடமொழிப் பற்றாளரின் புத்தம் புது முடிவுக்குக் கூறப்படும் ஆதாரம் உண்மையில் அவர்கள் இதற்குமுன் செய்த ஒரு பழைய முடிவு மட்டுமே. பிறமொழிச் சொற்களைத் தமிழில் திருத்தமாக எழுதவும் பேசவும் வேண்டும்