268
அப்பாத்துரையம் - 2
கெட்டு, ‘ச’கரம் வடமொழியில் முதற் ‘ச’கரம் போல ஒலிக்கிறது. இதனால் ஏற்படும் மற்றொரு பிழை உண்டு. அது தமிழ்மரபு கெடுப்பது மட்டுமன்று. வடமொழிமரபும் கெடுப்பது. முதற் ‘ச’கரமும் ‘வ’கரமும் இணைந்த மெய்மயக்கம் எப்படித் தமிழ்மரபுக்கு அயலானதோ அவ்வாறே, வடமொழிமரபுக்கும் அயலானது. வடமொழியிலும் அவ்விரு மெய்களும் மயங்குவ தில்லை. ஆகவே, இத் திருத்தம் இரு மொழிகளின் எழுத்து, ஒலி, மரபு ஆகிய மூன்றையும் பிழைபட வைத்து இரு மொழிக்கொலை யாகிறது.
இன்னும் ஒரு சாரார் பொது வெழுத்தாகிய இத்தமிழ் 'ச'கரத்திற்குப் பதிலாக, புதிதாக இப்போது புகுத்தப்படும் எழுத்துகளுள் ஒன்றான ஈற்று வரியின் இரண்டாவது ‘ச’கரத்தை (ஃச=ஸ) பயன்படுத்தி (ஈஸ்வரன், சாஸ்வதம் என்று) எழுதிவிடுகிறார்கள். இங்கே தமிழ் மரபும் தமிழ் இலக்கணமும் தவறுவதுடன் தவறு நிற்கவில்லை. வட மொழியின் மூல எழுத்தும், ஒலியும், மரபும் யாவும் தவறி, எழுத்து மாற்றமே ஏற்பட்டுவிடுகிறது. தமிழக வடமொழிப் பற்றாளர் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் திருத்தத்தை, உண்மை வடமொழிப் பற்றுடைய வடவர் கண்டால், ஒன்று எள்ளி நகையாடுவர்; அல்லது வடமொழிக் கொலை கண்டு சீறுவர்.
‘சங்கரன்’ என்ற வடமொழிச் சொல் இடையின ஈற்றெழுத்தாகிய ‘ச' கரத்தையே முதல் எழுத்தாக உடையது. இது சைவர் வழிபடும் முழுமுதற் கடவுள் பெயராகிய சிவ பெருமானைக் குறிப்பது. மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகைத் திருத்த முறைப்படி புதிய புகுத்தீட்டு ‘ச’கரங்களில் ஒன்றை வழங்கி அதைத் தமிழில் எழுதினால், மேற்குறிப்பிட்ட ‘ஈஸ்வரன்’, ‘சாசுவதம்' ஆகிய சொற்களில் ஏற்படும் எல்லாப் பிழைகளுடன் பொருட் பிழையும், பொறுக்க முடியாத கடவுள் நிந்தனைச் சீற்றமும் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில், மூல வடமொழியிலும் பொது எழுத்துடன் எழுதப்படும் தமிழ் வடிவிலும் ரண்டிலும் அது சிவபெருமானைக் குறிக்க வழியுண்டு. மாறுபட்ட புதிய புகுத்தீட்டு எழுத்துடன் எழுதப்படும் திருத்த வடிவிலோ, அது தகாக் கலப்பினப் பிறவி அல்லது கீழ்மகன் என்ற பொருளை மட்டுமே தரமுடியும். இது