அப்பாத்துரையம் - 2
270 ||- மதிப்புப் பெற்ற அறிவாளிகள் மிகச் சிலராகவே இருப்பர். அவர்கள் விளக்கத்தின் பின்னும் பலர், மொத்த இறக்குமதி ஒரு நீண்ட காலத்திட்டம் என்பதை ஏற்கத் தயங்கவே செய்வர். வட மொழிப்பற்றாளரும் தம்மைப் போன்ற உள்நோக்கமற்ற தமிழரே என்ற எண்ணத்தால், ஒரு சிலர் அவ்வடமொழிப் பற்றாளருடன் சேர்ந்து அத்தகைய திட்டம் கிடையவே கிடையாது என்று மறுக்கவும் துணிவர். ஆனால், இத்தனை வகையினரும் தமிழக எல்லை கடந்து பார்வையைச் செலுத்தினால், அத்திட்டத்தின் மெய்யுருவைக் கண் முன்னேயே காணலாம். தமிழ் தவிர, மற்றெல்லாத் தமிழினஞ் சார்ந்த தென்னக மொழிகளிலும் வட மொழிச்சொல் புகுத்தீட்டுப்படி போலவே, வடமொழி எழுத்துப் புகுத்தீட்டுப்படியும் முற்ற முழுக்க வெற்றியடைந்துவிட்டன- இன்றல்ல, ஆயிர ஆண்டுகட்கு முன்னரே வெற்றியடைந்து விட்டன!
மொழியாராய்ச்சித் துறையில் நுணுகி நோக்கினால், வட மொழியின் இவ்வெழுத்துப் புகுத்தீட்டுப்படி தென்னகத் தமிழின மொழிகளில் மட்டுமல்ல, தென்கிழக்காசியத் தாய்மொழிகள் பலவற்றிலும் வெற்றிகரமாகியுள்ளது என்பது தெரியவரும். சிங்கள மொழியிலும் பாளியிலும், பாகதங்களிலும் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குள்ளாகவும் கன்னட தெலுங்கு மொழியில் (பண்டை வடுக மொழியில்) கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னும், மலையாள மொழியிலும், வட இந்தியத் தாய் மொழிகளிலும் கி.பி. 12ஆம்நூற்றாண்டுக்குப் பின்னுமே இப்புகுத்தீடு முற்றுப்பெற்றது.
திருத்த நோக்கத்துடன் நாலு எழுத்துகளை இவ்வாறு புகுத்தீடு செய்வதைத் தமிழர் எதிர்த்துத் தடுத்து நிறுத்தாது, வாளா மதியாது இருந்தால் ஊசிச்சுமை நாளை உலக்கைச் சுமையாகவும், உலைக்கூடச் சுமையாகவும் வளர்வது உறுதி. ஏனெனில் வட மொழிப்பற்றாளர் முழுநோக்கு, முழு எழுத்து றக்குமதியுடன் நிற்பதல்ல. இவை முற்றுப்பெற்று முடிந்தமைந்த பின், இலக்கண இலக்கியங்களிலும் முழுதும் வடமொழிச் செல்வாக்குக் கொண்டு வரப்பட்டு, பிற தாய்மொழி வாழ்வுகள் போலவே, தமிழும் மீண்டும் ஒரு புதிய ‘வடமொழி’, அதாவது பேசா இலக்கிய மொழிக்கு இடம் தந்து வடநாட்டுத்