(272)
அப்பாத்துரையம் - 2
க்களாக உயர்த்திப் பொதுமக்களிடமிருந்து துண்டு படுத்தி விடவோ, இரண்டும் தவறினால் பிரச்சாரத்தால் பொது மக்களிடம் அவர்களை மொழி வேற்றுமையாளர், இன வேற்றுமையாளர் என்று தூற்றிச் செல்வாக்கிழக்க வைக்கவோ செய்துவிடுதல் எளிது.
சி
ஆசிரியர் மறைமலையடிகள் கால முதல், தமிழர் மறுமலர்ச்சி எய்தியுள்ளனர். அதுமுதல் இச்சூழ்நிலைகள் ஓரளவு மாறியுள்ளன. ஆனால், தமிழர் விழிப்பாயிருந்து வடமொழிப் பற்றாளர்களைப்போலவே நீண்டகாலத் திட்டமிட்டுத் தாய் மொழியின் வழி சென்றுவிடல் நேரிடும். அவ்வழி, நெடுந்தொலை சென்றுவிட்ட தமிழின மொழிகளையும் மீளா அடிமைகளாகவே விட்டு விடும் நிலை ஏற்படும்.
வடமொழி எழுத்துகள் புகுத்தீட்டையோ, அதை உள்ளடக்கிய நீண்டகாலத்திட்டத்தையோ, அதன் கூறு களையோ எதிர்க்கும் தமிழ்ப் பற்றாளர், தமிழினப் பற்றாளர்கள் மொழி வேற்றுமை, இன வேற்றுமை, சாதி வேற்றுமை காட்டுபவர்கள் என்ற குற்றச்சாட்டை தமிழர் பலர் வெறும் வசவுதான் என்று மதியாமல் விட்டுவிடுகின்றனர். இது தவறு. இக்குற்றச்சாட்டு அறிஞரை அறிஞர் எதிர்க்கும் வாத எதிர்வாதக் குற்றச்சாட்டன்று. அரசியல் வழக்கு மன்றத்தில் சட்டப்படி முறையிடப்படும் குற்றச்சாட்டுகள்கூட அல்ல. முதலதற்குத் தண்டனை கிடையாது.தண்டனையிலிருந்து மீளும் வகையுண்டு. இரண்டாவது தண்டனைக்குரியது. ஆனால், அது தற்காலிகமான தண்டனையே. அத்துடன் அது குற்றம் சாட்டப்பட்டவரை மட்டுமே தாக்கும். மூன்றாம் வகையான இக் குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் பிரச்சார வடிவில் செய்யப்படுபவை என்றும் உயர்நீதி மன்றங்கள், அரசியல்கள் யாவும் கடந்த உயர்நீதி மாமன்றம், அரசியல் கடந்த இன மாமன்றத்திலேயே இம்முறையீடும் இத்தண்டனையும் நடைமுறைக்கு வருகின்றன. சரியாகவோ தவறாகவோ, நியாயமாகவோ, அநியாயமாகவோ, இம் மன்றத்தில் அறிஞர், சிந்தனையாளர், இனத்தொண்டர் தண்டிக்கப்பட்டால், அத்தண்டனையில் பாதிக்கப்படுவது ஓர் அறிஞனல்லன், ஒரு சிந்தனையாள னல்லன்; இனப்பற்று, இனப்பற்றடிப்படையான சிந்தனையோ, தமிழினத்தின் உரிமைத்