பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

275

ஆங்கிலக் கல்வியில் நெடுந்தொலை முந்திக்கொண்ட அளவுக்கு ஆங்கில ஆதிக்கமும், அவர்கள் குழுநலமும் இனநலமும் தற்காலிகமாக இணைந்தன. வடமொழிப் பற்றாளரே ஆங்கில ஆட்சியின் ஆட்சி வகுப்பாய் அமைந்தனர். ஆனால், ஆங்கிலம் நிலையாக அக் குழுநலத்துக்கும், இனவேறுபாட்டுக்கும் உதவவில்லை. பாமர மக்களில் பல்வேறு வகுப்பினரும் படிப்படியாக அதைக் கற்று ஆட்சி வகுப்பினரின் இடத்தில் சிறிது சிறிதாகப் பங்கு பெற்றனர். ஆங்கிலப் பற்று இந்தியப் பற்றாக எளிதில் மாறியதற்கும், இந்திக்கு வடமொழிப் பற்றாளரும், அவர்கள் தலைவர்களும் ஆச்சாரியாரான ஆட்சி வகுப்பின் தலைவரும் முந்திக் கொண்டு முனைத்த ஆதரவு தந்ததன் காரணம் இதுவே. இந்தி புதிய ஆட்சி மொழி. ஆங்கிலத்தில் முந்திக்கொண்டதுபோல அதில் வடமொழிப் பற்றாளர் எளிதில் முந்திக்கொள்ள முடியும். அத்துடன் பெயரளவில் ஆரிய இனமொழியாகிய ஆங்கிலம் போலன்றி, அது நேரடியாக வடமொழித் தொடர்பும் உடையது. தவிர, தமிழை, வடமொழி மயமாக்குவதைவிட இந்தியை வடமொழி மயமாக்குவது எளிது. வடவர் ஏற்கெனவே வடநாட்டுப் பொதுமக்கள் கண்களிலும் பொடியைத் தூவிக்கொண்டு அதை விரைந்து செய்து வருகின்றனர். வடமொழி மயமான ஆட்சிமொழியின் ஆதிக்கம், தமிழையும் தென்னக மொழிகளையும் இன்னும் விரைந்து வடமொழி மயமாக்க உதவும். இக்காரணங்களாலேயே ஆங்கிலத்தை விட்டு விட்டோ, ஆங்கிலத்துடன் சேர்த்தோ இந்திக்கு அவர்கள் ஆதரவு தர விரைந்துள்ளனர்.

ஆயினும், இந்தியும் ஆங்கிலத்தைப்போல ஒரு தாய்மொழி. அது மட்டுமன்று. ஆங்கிலம் ஆங்கில நாட்டு மக்களுக்கே தாய்மொழி, ஆங்கில நாட்டு மக்கள் இந்தியருடனோ, தென்னக மக்களுடனோ போட்டியிடுபவர்கள் அல்லர். அப்போட்டியில் வட மொழிப் பற்றாளர்க்கே முழு இடம் விட்டுவிடுபவர். தென்ன கத்தில் முதன்மையும், இந்தியாவில் அதற்குகந்த சூழலும் இருக்கும்வரை ஆங்கிலேயர்க்கு இந்தியரை அடிபணிய வைத்துத் தாம் அருகே கங்காணிகளாய் அதிகாரம் செய்து பசப்பி வாழ்வதில் அவர்களுக்குச் சிறிதும் தடை கிடையாது. ஆனால், இந்தி தொடக்கத்தில் ஆங்கிலம்போல அவர்கள் குழுநலம் பேணினாலும், நீடித்து வடமொழி ஆதிக்கத்துக்கும் உதவக்