282) ||
அப்பாத்துரையம் - 2
இலக்கியத்தில் பிறமொழிப் பெயர்கள் ஒலிப்பை ஓரளவு காட் அதுவும் ஆதிக்க ஆட்சி மொழிகளாகவோ கல்வி நிலைய ஆட்சி மொழிகளாகவோ இயங்கும் பிறமொழி ஒலிப்பை, அப் பிறமொழி படித்தவர்கள் திருத்த உணர்வைக் கூடியமட்டும் புண் படுத்தாதிருப்பதற்கே இவை வழங்கப்பட்டுள்ளன. இதனால் வை தமிழ் மொழியில் உள்ள எழுத்துகள் ஆய்விடமாட்டா.
உண்மையில் பிரச்சார மூலமாகத் தங்கள் கையில் உள்ள செய்தி இதழ்கள், தாம் எழுதும் ஏடுகள் மூலமாக வெற்றிகரமாகப் புகுத்தீடு செய்ய முடியாத நான்கு எழுத்துகளையும் அவர்கள் தமக்கே உள்ளாதரவான அயல் பண்பாட்சி அரசியலின் மூலம் சாதித்துக்கொள்ள எண்ணுகிறார்கள். அரசியற் சட்டத்தின் உதவி கொண்டு, மக்களுக்கும் மொழிக்கும் எதிராகச் சதிசெய்ய முனைந்துள்ளார்கள். நேர் பிரச்சாரத்தால் முடியாததைப் பின்னிருந்து மறைமுகமாகக் கோழைத்தனமாகப் புகுத்தத் தலையிட்டுவிட்டனர். தமிழர் தன்மானத்துக்கும், பற்றுக்கும் இஃது ஓர் அறைகூவல் ஆகும்.
னப்
கடைசியாகப் புகுத்தீடு செய்யப்படும் எழுத்துகளின் வடிவத்தைப் பற்றிய ஒரு மறைந்துவரும் மாயச் செய்தியைக் கூற விரும்புகிறோம்.
இவ்வெழுத்துகள் செய்தி இதழ்களிலும், புதிய எழுத்தாளரின் புனை கதைகளிலும் எழுதப்பட்டபோது தமிழர் பலர்க்கு அவை புதியனவாகவும் பலருக்கு ஒலிக்க முடியா தனவாகவும் இருந்தன. இது பற்றிய அணிமைக் கால நாட்டுப்புறக் கேலிச்சித்திரம் ஒன்று உண்டு. பூ என்பதற்குரிய வடமொழிச் சொல் புட்பம் என்று தமிழாக்கப்பட்டு, அணிமைக்காலத்தில் புகுத்தப்பட்டிருந்தது. அதைத் திருத்தமாகப் புகுத்தீட்டெழுத் துப்படி புஃட்பம் என்றும் சிலர் எழுதி வருகிறார்கள்.
ஆனால், நாட்டுப்புறத்தில் வடமொழிப் பற்றாளர்க்குப் புறம்பான பல தமிழ் வகுப்பினரும் அதை ஒலிக்க முடியாமல் பல குளறுபடிகள் செய்தனர். இதனை இச்சித்திரம் கேலி செய்து காட்டுகிறது.
முழுத் திருத்தமாகத் தமக்கு ஒலிக்க முடியாது என்று கருதிய நாட்டுப்புற வடமொழிப் பற்றாளன் ஒருவன், பிற நாட்டுப்