பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

283

புறத்தார் ஒலிப்புகளைக் கேலிசெய்து தானே கேலிக்கும் ஆளாகிறான்.

'இதைப் பூ இண்ணும் சொல்லுவாக; புப்பம் இண்ணும் சொல்லுவாக, புட்பம் இண்ணும் சொல்லுவாக, ஐயா சமற்கிருத சொல்மாதிரியும் சொல்லுவாக' என்றானாம் அவன்.

இன்றும் இப்புகுத்தீட்டு எழுத்துகளைத் திருத்தமாக ஒலிக்கிறோம் என்று சுருக்கி, அதை ஒன்றுக்கு ஒன்றாக ஒலிக்கும் மக்கள், நாட்டுப்புறத்தில் மட்டுமன்று, நகர்ப்புறங்களிலும் மிகுதி உண்டு. அவர்கள் சீரிய திருத்தமான நாவில் 'ரசம் சொகுசாயிருக்கிறது' என்பது 'ரஃசம் ஃசொகுஃசாயிருக்கிறது' என்றோ, ரஃசம்ஃட் சொகுஃட்சாயிருக்கிறது' என்றோ 'ரட்சம் ட்சொகுட்சா யிருக்கிறது' என்றோ இனிதாகச் செவிக்கு விருந்தளிக்கும்.

ஃஅ இல்லாத இடத்தில், ஃஅ ஒலித்து, ஃஅவன், ஃஇவன் என்பன வரையும், ஃட்ச இல்லாத இடத்திலும் அது சேர்த்து, வட மொழி விற்பன்னர்களாக முயன்று ‘ஆஃட்ச்குக் குட்டி வந்து, வேஃட்ச்டியைத் தின்கிறது, முரஃட்ச்டுக் கம்பெடுத்து ஓஃட்ச்டு, ஓஃட்டு' என்று கூறுபவரும் இல்லாமலில்லை.

இத்தகைய ஆபாசக் குளறுபடிகளுக்குள் தமிழையும், தமிழரையும் தள்ளும் இந்தப் புகுத்தீடு தமிழ் தமிழரிடமிருந்து ஒதுங்கிய, ‘அம்மாஞ்சிப் பத்திரிகை'ப் புகுத்தீடாக வந்து வெற்றி காணாமலே விளையாடியதுபோல், அரசியல் அதிகாரத் துடனும் செல்வாக்குடனும் தமிழர் மீது மொழி அடக்குமுறை செய்ய வந்திருக்கிறது.

ஒலிப்பை அறியாத தமிழர்கள் இப்புகுத்தீட்டெழுத்து களைக் குத்து மதிப்பாகவேனும் பொது எழுத்துக்களுடன் தொடர்புபடுத்தி உரைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

இவ்வெழுத்துகள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய தமிழின மொழிகளில் ஆயிர ஆண்டுகட்கு முன்பே புகுத்தப்பட்டுவிட்டன என்று கூறினோம். ஆயிர ஆண்டுகளாக அம்மொழியாளர் வடமொழிச் சொற்கள் கலந்த, தம் தாய்மொழியைத் திருத்தமாக எழுதுவதற்கு மட்டும் அந்த எழுத்துகளைக் கையாளவில்லை. எல்லா வடமொழி