தமிழன் உரிமை
287
காரணத்தால், மலையாளப் போலிசாரையும் மலையாளப் போலிசு அதிகாரிகளையும்தாம் ‘பச்சைத் தமிழர்' ஆட்சி நம்பிற்று. ‘ பச்சைத் தமிழர்’ ஆட்சியில் எந்த மலையாளியும் ‘தமிழன்’ உரிமைகேட்கும் எந்தத் தமிழன்மீதும் பழிதீர்த்துக் கொள்ள முடியும் - சட்டத்தின் உதவியும், பதவியின் உதவியும் கொண்டே!
-
தமிழன் இந்த அயலினத் தேசியத்தை பகை னத் தேசியத்தை எத்தனை நாள் தன்தேசியம் என்று கொண்டாடித் தன் உரிமையழித்து வாழ முடியும்?
உலக இயக்கங்களிலெல்லாம் தமிழன் பண்டிருந்தே ஈடுபட்டிருந்தான். தமிழ்நாடு என்ற சால்லைவிடத் தமிழிலக்கியத்தில் உலகு, தமிழ்உலகு என்ற சொற்களையே மிகுதியாகக் காணலாம். பண்டிருந்தே ‘ஒருலகை'க் கனாக் கண்டவன் என்ற முறையில் தமிழனுக்கு அகல் உலகப் பற்று இயற்கையானது, குருதியிலேயே படிந்து வருவது. ஆனால், அவன் தற்பண்பு பேணாத காரணத் தால் அவனால் உலக நாகரிகத்தை வளர்க்க முடிந்தாலும், அந்த உலகில் அவனுக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை.
ஓருலகைக் கற்பனை செய்ததுபோலவே தமிழன் இமயம் வரை அளாவிய ஒரே தேசியத்தையும் கனவு கண்டதுண்டு.
‘தென்குமரி வடபெருங்கல்
குணகுடகடலா வெல்லை
ஒருமொழி வைத்து உலகாண்ட சேரல் ஆதன்’
என்பது போன்ற சங்க காலப் பாடல்கள் இதற்குச் சான்று. ஆனால், ஓருலகு தமிழன் கனவாய் இருந்ததுபோலவே, 'ஒரே இமய எல்லை'யும் கனவாகவே நின்றது. சங்ககாலத் தொடர்பு களால் நாகரிகக் கூறுகள் ஓரளவு இமயம்வரை பரந்ததுண்டு. சோழப் பெரும் பேரரசர் ஆட்சியால் அந்தப் பண்பாடு இன்னும் மிகுதியாகத் தென்கிழக்காசியாவிலும் கங்கை வெளியிலும் பரவியதுண்டு. இன்றிருக்கும் இந்தியாவின் எல்லைக்கோடு சோழப் பேரரசர் ஆட்சியின் எல்லைக் கோடாகவே அமைந்துள்ள பொருத்தத்தைப் பலவரலாற்றாசிரியரும்,