பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 2 288) ||- அரசியல் வாணரும் கவனிக்கத் தவறியுள்ளனர். ஆகவே, வடதிசை முழுவதும் ஒரே தேசியமாக்கும் தமிழன் கனவு நிறைவேறா விட்டாலும். பாகிஸ்தான் நீங்கிய இன்றைய இந்தியப் பகுதியை அவன் தன் ஆட்சியால் ஓரளவு ஒன்றுபட்ட அடிப்படைப் பண்பாடுடைய பரப்பாக்குவதில் வெற்றிபெற்றான் என்னலாம். சோழப் பெரும் பேரரசர் ஆட்சி ஒரு நூற்றாண்டுக்குள் கவிழாமல் நீடித்திருந்தால், ஒருவேளை இந்தியா ஒரு தேசியமாக உருவாகியிருக்கக்கூட வழியுண்டு.

இது மட்டுமன்று, தன் முழுநிறை தேசியத்தின் நிழலாகத் தமிழன் வளர்க்க எண்ணிய இந்தியத் தேசியத்தில் தமிழனையும் தமிழினத்தவரையும் தவிர, மற்றவர் யாவர்க்கும் - அயலவர் களான பார்சிகளுக்கும் யூதர்களுக்கும் வெள்ளையர்களுக்கும்கூட டமுண்டு. தமிழனுக்கு மட்டும்தான் இடமில்லை. இதைத் தமிழன் கவனித்தல் வேண்டும்.

இந்தியாவிலுள்ள எல்லாச் சமயங்களின் சமய நூல்களும் தமிழில்தான் இருக்கின்றன. - தமிழில் மட்டும்தான் இருக்கின்றன. கன்னடத்தில் ஒருசிலவும் தெலுங்கிலும் சமற்கிருதத்திலும் ஒன்றோ இரண்டோ மட்டுமே உள்ளன. இவையும் தமிழைப் போல் எல்லாச் சமயங்களுக்கும் உறைவிடமாய் ல்லை. அவ்வாறிருந்தும் தமிழோ, தமிழின மொழிகளோகூடச் சமய மொழியாகக் கருதப்படாமல், அதற்கு உரிமையற்ற வட இனமொழிகளின் உயிரற்ற மொழியான சமற்கிருதமே அவ்வாறு கருதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றுக் காலமுழுவதும் வளர்ந்து அதன் முழுநிறை தேசியக் கண்ணாடியாக விளங்குவது தமிழ். தமிழ்க்கு அடுத்தபடி கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் அந்நிலை உடையன. ஆனால், தமிழோ, தமிழின மொழிகளோ தேசிய மொழிகளாகக் கருதப்படாமல், வடதிசையினத்துக்கு மட்டுமே உரித்தான - பண்படா மொழியான -இந்தி, தேசியமொழி ஆக்கப் பட்டுள்ளது.வடதிசையில் கூட அது பண்பற்ற, அயலினப்பண்பு விரவிய மொழி என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் ஓரளவு

லக்கிய நயமுடைய அதன் உருது வடிவமும் புறக் கணிக்கப்பட்டு, மக்கள் தொடர்புடைய காந்தியடிகளும் பண்டிதநேருவும் ஆதரித்த பேச்சுமொழி இந்தி(நெடில்)யும்