பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

289

கைவிடப்பட்டு ‘உயர் இந்தி' என்ற பண்பற்ற புத்தம் புது வடநாட்டு மொழி தமிழர்மீது சுமத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள இரண்டு உள்ள இரண்டு இனமொழிக் குழுக்கள், வட திசை ஆரிய இனமொழிக் குழுவும் தென்திசைத் தமிழின அல்லது திராவிட மொழிக் குழுவும் ஆகும். ஆனால், சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் வட இன மொழிக்கே ஆதிக்கம் தரப்பட்டுள்ளது. தென் இனம் இரு துறையிலும் ஆளப்படும் இனம் என ஒதுக்கப்பட்டே உள்ளது.

பிரிட்டன் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆண்டபோது அதை அடிமை ஆட்சி என்று கூறக் காங்கிரசுக்காரர் தயங்கவில்லை. ஆனால், பிரிட்டன் இந்தியாவை என்றும் இங்கிலாந்துடன் சேர்த்து ஒரு நாடாக்கி விடவில்லை. அவ்வாறு எண்ணவுமில்லை. இந்தியாவுக்குத் தனிச் சட்டமன்றங்கள், சட்டமியற்றும் உரிமைகளை ஆங்கிலேயர் அளித்திருந்தனர். ஆனால், இந்திய ஏகாதிபத்திய ஆட்சியில் தென்னாட்டுக்குத் தனிச்சட்டமன்றம், சட்டம் இயற்றும் உரிமைகள் இல்லை. அது வடநாட்டுச் சட்டசபைக்கே உட்படுதல் வேண்டும். அத் துடன் பிரிட்டன் ஆட்சிக் காலத்திலிருந்த மாகாணத் தன்னாட்சியும் இப்போது கிடையாது.

தமிழ்ப் பற்றும் தமிழினப் பற்றும் காங்கிரசுக்குள்ளும் பரவி, எல்லாக் கட்சியினரும் தமிழ்த்தேசியத்தில் ஓரளவு ஒன்றுபட்டு, இந்தி எதிர்ப்புக் கிளம்பியபின், இந்தி கட்டாயமன்று என்ற பசப்பும் வடதிசைப் பல்கலைக் கழகங் களில் தமிழ் அல்லது தென்னாட்டு மொழிகளுள் ஒன்றுக்கு இடந்தர வேண்டு மென்றும் மாயாசாலக் கண்வெட்டுகள் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அஞ்சல் நிலையத்திலும் ஊர்தி நிலையத்திலும் இந்தி ஏறு நடையுடன் உலவும் காட்சி, வடவரின் உண்மை ‘உருவை'த் தமிழர்க்குக் காட்டுவதாகும்.

'கோவணம் உடுத்தாத ஊரில் கோவணம் உடுத்தவன்தான் பயித்தியக்காரன்' என்ற ஒரு பழமொழி தமிழில் உண்டு. போலி இந்தியத் தேசியத்தில் தமிழன் நிலை இதுவே. இயற்கைத் தேசியமும் முழுநிறை தேசியமும் ஆன தமிழகத்தின் ஒளி நிழலாகப் பரவியுள்ள ஒரு தேசிய நிழலில் தமிழன் தன் தேசிய உரிமை மட்டும் இழந்தவனாகிறான்.