பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




290

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

அப்பாத்துரையம் – 2

முதலாவது, அடிமையாட்சிக் காலத்தில் தமிழன் தன் முழுநிறை தேசியத்தின் வரலாறு மறந்தான். வெள்ளையரும் இதனை மறக்கடிக்க வைக்க அரும்பாடுபட்டனர். தமிழன் தேசியம் ஒருபுறம் தென்னாட்டையும் மற்றொருபுறம் தெற் காசியாவையும் அளாவிய ஓர் உயிர்த் தேசிய ஒளியாய்க் கீழ்த்திசையின் வாழ்வையே மலரச்செய்துவிடும் என்பதையும், அத்தகைய கீழ்த்திசை வாழ்வை முற்றிலும் அழிக்கவல்ல ஆற்றல் வடதிசைப் போலித் தேசியமே என்றும் வெள்ளை ஏகாதிபத்தியம் கண்டுகொண்டது.அவ்வெண்ணத்துடன் அந்த வெள்ளை ஏகாதிபத்தியம் வளர்த்த அடிமை ஏகாதிபத்தியக் குழந்தையே இந்தி - உருவற்ற இந்திய ஏகாதிபத்தியத் தேசியத்தின் முதிராக் கரு!

இரண்டாவதாக, முழுநிறைவுடைய அமைப்புகள் யாவுமே தன்னுணர்வற்ற அமைப்புகளாக இருப்பது இயல்பு (The unconscious is the alone perfect) என்பதைக் கார்லைல் என்ற அறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கியையவே தமிழர் தேசியத்தின் முழுநிறைவு பெரிதும் தமிழர் எளிதில் காணாத ஒன்றாக நிலவுகிறது. வரலாற்றாசிரியரும் அறிஞரும் காட்டினாலன்றி னாலன்றி அதன் தனித் தன்மையையும் தொலை விளைவுகளையும் பொதுமக்கள் எளிதில் காணமுடியாது. ஆனால், அயற் பண்பாட்சியிடையே வரலாறு எழுதுபவர் தமிழ்ப் பண்பற்றவராகவே அமைந்ததனால் அதனைக் காணாமல், அல்லது காட்ட விரும்பாமலே வரலாறு எழுதி யுள்ளனர். இந்திய வரலாற்றில் தென்னகத்தை அந்த வரலாற்றுப் பிதாக்கள் முதலில் முற்றிலும் மறந்துவிட்டதும், தமிழக எழுச்சியின் பின் அதை வட திசையின் ஒரு வால் அல்லது நோய் உறுப்பாகக் காட்டியிருப்பதும் இதனாலேயே ஆகும்.

உலக வரலாற்றிலே தமிழகமும் அதனைச் சார்ந்த பிற தென்னாட்டு மொழியினங்களும் தாம் மிகப்பழைமையான முதல் தேசியங்கள் ஆகும். மொழிச் சார்பில் தேசியங்கள் பிறந்து, மொழிச் சார்பிலேயே பெயர் பெற்றதற்கு உலக வரலாற்றிலேயே முதற் சான்றுகள் இவையே. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்றாசிரியர்களின் காதுவரை தமிழகம்