பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

291

என்ற பெயரும் அதன் மும்மண்டலங்களான சேர, சோழ, பாண்டியர் பெயரும் சென்றெட்டி யிருந்தன. மேனாட்டிலுள்ள மொழிச் சார்பான இன்றைய தேசியங்கள், தென்னாட்டுத் தேசியங்களுக்கு ஆயிர ஆண்டு பிற்பட்டே தோன்றின.வடநாட்டு மொழித் தேசியங்களோ பின்னும் எட்டு நூற்றாண்டு கழித்தே தொடங்கின. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாடுவரை சென்று எட்டி, கிரேக்க மொழியிலும் 'தமிரிகா' என்ற வடிவில் பதிந்துவிட்ட தமிழகம் என்ற பெயர் தமிழகத்திலே வாழும் ஒரு பச்சைத் தமிழன் காதுக்குள்ளும், அவர் அருகிலே உலவுகிற ஒரு 'சிவப்புத் தமிழன்' காதுக்குள்ளும் இன்னும் சென்று எட்டவில்லை என்பது வியப்பாகும். காங்கிரசு மேலிடப் பதவியாசையென்ற தமிழ்புகா மெழுகு வைத்து அவர்கள் காதுகளை மேலிடம் ஒட்ட அடைத்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது!

ஒரு தேசியம் உருவாவதற்கும் அந்தத் தேசிய மொழியில் இலக்கண இலக்கியம் அமைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் தேசியத்தைப் போலவே, இலக்கிய இலக்கணமும் முழுநிறை வளர்ச்சி பெற்று நீடித்த வாழ்வு பெற்றிருந்தது.

தமிழகத் தேசியம் உருவாகி, அதன் விரிவான தென்னாட்டுத் தேசியம் வளர்ச்சியுற்ற பின்னரே, இவற்றின் எல்லையிலுள்ள வட நாட்டு மொழிகள் தேசிய வாழ்வு மேற்கொள்ளத் தொடங்கின. ஆனால், அவை மொழித் தேசியங்களாகக் கூட இன்னும் முழுநிறை உருவாகவில்லை. இவற்றிடையே தமிழ்ச் சோழர் ஆட்சியில் சிறிதளவு மின்னல் போலத் தொடங்கிய ஒற்றுமைகூட இன்று சிதைந்துவருகிறது.

உலகுக்கு நாகரிகத்தை அளித்து, இமயம் வரையிலுள்ள இனக் கலவைகளுக்கு இனத்தேசியச் சாயல் அளித்துவந்த தமிழகத் தேசிய வாழ்வையே இந்தியாவின் போலித்தேசியம் அழிக்கக் கனவு காண்கிறது. ஒரு நல்ல வருங்காலத் தமிழகம் அமைப்பதற்கு மட்டுமன்றி, ஒரு நல்ல எதிர்கால இந்தியா வையோ, நல்ல எதிர்கால ஆசியாவையோ, உலகத்தையோ அமைக்க விரும்பும் எவரும், தமிழகத் தேர்தல் பிரச்சினையை மனித இனத்தின் உயிர்ப்பிரச்சி னையாகக் கருதுவது