பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. கடல் கடந்த தமிழர்

டு

இந்திய மாநிலத்தின் தென்கோடியில், தென்னாட்டின் ஒருபகுதியாயுள்ள தமிழ் கூறும் உலகப் பகுதியை மட்டும்தான் தமிழகம் என்று நீ வழங்குகிறாய் தமிழா! ஆனால், இந்தியத் தேசியமோ இதற்குக்கூடத் தமிழகம் என்று பெயர் கொடாமல், உன் தடமழித்துவிடக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகத்தின் பெரும்பகுதி இதுவானாலும், இஃது ஒன்றுதான் இந்தியத் தேசியத்தின் மாயப்பிடியுட்பட்டு முதல் முதல் 'கபளீகரம்' ஆக இருக்கும் பகுதி என்பதையும், இதன் உதவிகொண்டே பிறசிறு பகுதிகளிலும் தமிழகத்தின் உயிர்த் தடங்களை அழிப்பதற்கு அத்தேசியம் மற்ற நாட்டு அரசியல்களைத் தூண்டிச் செயலாற்றுவித்துவருகிறது என்பதையும் நீ அறியாய்! ஏனெனில், அகில இந்தியக் கட்சிகள் வ்வகையில் உன் கண்களை மூடித் திரையிட்டு வருகின்றன. தமிழினக் கட்சியில்கூட இந்தியத் தமிழகம் தாண்டிப் பெருந் தமிழக எல்லைபற்றிச் சிந்திக்க முயலவில்லை. இந்த ஒரு தமிழக விடுதலையே அவர்கள் நேரமுழுவதையும் கவர்ந்துவருகிறது.

தமிழா! நீ தமிழ்நாடு என்று கூறும் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தொகை ஏறத்தாழ மூன்றுகோடி. இதற்கு வெளியே தமிழ்பேசும் மக்கள் தொகை ஏறத்தாழ ஒருகோடி. ஆனால், வெள்ளையர் ஆட்சியிலும் சரி, இந்தியர் ஆட்சியிலும் சரி - கடல் கடந்த தமிழர் பற்றிய எந்த வகுப்பு தொகுப்புப் புள்ளி விவரமும் ஒழுங்காகச் சேகரிக்கப்படவில்லை. தமிழினம் இந்திய இனத்தின் ஒரு சிறந்த பகுதியாக வாழ்தல் வேண்டும் என்பதில் அந்த இரு ஏகாதிபத்தியங்களுக்கும் என்ன ஆவல் இருக்கமுடியும்? ஆனால், அதுபற்றி நீயும் கவலைப் பட்டதாகக் காணவில்லையே! உன் பத்திரிகைகள் தமிழகத்தையே காணத் தயங்கும்போது,