பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




294

அப்பாத்துரையம் - 2

தமிழகத்துக்கு வெளியே 'ஏழு' கடல்களிலும் சிதறிக் கிடக்கும் உன் தோழர்களைப் பற்றியா அவை கவலைப்படும்?

கடல் கடந்த தமிழர் என்றுகூட அவை அத் தமிழர்களைக் கூறாது; கடல் கடந்த இந்தியர் என்றுதான் கூறும். ஏனென்றால், அவற்றில் அக்கறை கொள்ள வேண்டியவர் தமிழரேயானாலும், ஆளவேண்டியவர் இந்தியர்கள் தாமே!

பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்கு, இந்திய அரசாங்கம் தன் சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சலுகைகளைவிட மிகுதியாக, மருமகப் பிள்ளைகளுக்குத் தரும் இராசோபசாரம் தருகிறது.

'தமிழ்' என்ற சொல்லையே வெறுக்கும் நம் ‘சென்னை’ அரசாங்கமோ இந்த அகதிகளுக்குத் தன் எசமானர் பிள்ளை களுக்குக் காட்ட வேண்டிய மரியாதைகளைக் காட்டிப் பயபத்தியுடன் தன் தில்லித் தேவதைகள் மனமகிழ அவர்களுக்குப் பாத காணிக்கைகள் - மானிய உதவி, கடன் சலுகை, வாடகைச் சலுகை, உதவிச் சம்பளப் பதவிகள், வருவாய்க்குரிய அமோக வசதிகள் - தருகின்றது. ஆனால், தமிழக அகதிகளையோ, இந்தியப் பகை அரசாங்கத்தின் செல்வாக்கின் பயனாக, மறைமுகத் தூண்டுதலின் பயனாக, வெளிநாட்டு அரசாங்கங்கள், வெள்ளை முதலாளிகள் வேண்டும்போது குறைந்த சம்பளத்தில் வைத்து வேலைவாங்கிப் பிழிந்து குற்றுயிராக்கி, வேண்டாத போது குற்றுயிருடன் இங்கே துரத்தியடிக்கின்றன. உற்ற தாயால் துரத்தப்பட்டு, பெற்றதாய் பஞ்சை அடிமையாயிருக்கும் நாட்டிலே கால்வைக்கவும் இடமில்லாமல் அவர்கள் அல்லல் படுகின்றனர்.

தில்லி ஏகாதிபத்திய நலனுக்காக, வடநாட்டு ஆலை முதலாளிகள் நலனுக்காக, கைத்தறித் தொழில் அழிக்கப்பட்டு, அத்தொழிலாளர் அவதிப் பட்டனர். இங்கே அடிமைத் தமிழன்னை பெற்ற பிள்ளையே அவள் கண்காண அவதிப்படும் போது, வெளியிலிருந்து வரும் அகதிகளை யார் கவனிப்பது?

கடல் கடந்த இந்தியர்களுள் தமிழர் பெரும்பான்மை யானவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலப் புள்ளி விவரங்கள் இல்லையானால் இதை நாம் எளிதில் அறிய முடியாது. இந்தியா