பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

295

விடுதலை பெற்ற பின் அங்கே இருப்பவர்களுள் தமிழர் உண்டு என்ற செய்தியே மறைக்கப்படுகிறது. மோரிசு போன்ற தொலை நாடுகளில் தமிழரே நாட்டு மக்களுள் மிகப் பெரும்பான்மை யானவர்கள். பிஜித் தீவுகளிலும் அப்படியே. இந்திய ஏகாதி பத்தியத்துக்கு உரிமை வந்தபின், அங்குள்ள இந்தியர்களிடையே ந்திய நாகரிகத்தைப் பரப்புவதில் புதிய ஏகாதிபத்தியம் அக்கறை கொண்டது. மோரிசை ஆள்பவர்கள் பிரஞ்சுக்காரர். பிரஞ்சு மொழி ஆட்சிமொழியாகியிருக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் பிரஞ்சு ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேசி, இந்தியர்களுக்கு இந்திய மொழியாகிய இந்தியும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு செய்து, அதுமுதல் இங்கிருந்து இந்தி ஆசிரியர்களை ஏற்றுமதி செய்துவருகிறது.

பாவம்! மோரிசிலுள்ள அடிமைத் தமிழன் தன்னை ஆளும் ஓர் அன்னிய ஏகாதிபத்தியத்தின் மொழியைக் கற்பது போதாமல், தன் இனத்தவரை ஆளும் மற்றோர் அன்னிய ஏகாதிபத்தியத்தின் மொழியையும் கற்கவேண்டியவனாய் இருக்கிறான். தமிழன் அகில இந்தியக் கட்சிகளுக்குப்போடும் ஒவ்வொரு 'வோட்' டும் இந்நாட்டுத் தமிழன் கழுத்தை மட்டும் அறுக்கும் கத்தியன்று; மோரிசுத் தமிழன் கழுத்திலும், அதுபோன்ற பிஜி, கயானா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலேயாத் தமிழர் கழுத்திலும் அடிமைத் தளையை இன்னொருபடி இறுக்கமாக முறுக்கும் செயலும் அதுவே ஆகும்!

"கரும்புத் தோட்டத்திலே!' என்று பாரதியார் சென்னைக் கடற்கரைக் காங்கிரசுக் கூட்டத்தில் பாடிய பாட்டுதான் அவரை நாடு கடத்தித் தண்டனைக்கு உள்ளாக்கிற்று. இது பிஜித்தீவில் தமிழன் அன்று பட்ட அவதியைச் சுட்டிற்று. பிரிட்டிஷ் ஆட்சியில் பிஜித் தமிழன் இருந்தான் என்பது தமிழர்க்குத் தெரிய வாவது வழியிருந்தது. இன்றுதான் தமிழன் விடுதலை இந்திய'னாய் விட்டானே! 'இந்தியர்' கையில் தமிழன் தன் தலைவிதியை ஒப்படைத்துவிட்டுத் தான் தேவாரம் பாடிக் கொண்டு காலம் கழிக்கிறான்.

மோரிசைப்போலவே, பிஜியிலும் தமிழர்தாம் நாட்டுக் குடிகளில் பெரும்பான்மையினராய் இருக்கின்றனர்.