பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




296

அப்பாத்துரையம் - 2

தமிழர் வாழும் இடங்களையே தமிழன் அறிவதில்லை - அவன் அங்கே போக்குவரவு வைத்துக்கொள்ள முடியாதபடி அவை வெகுதொலையில் இருப்பதால்! ஆனால், தென் ஆப்பிரிக்காத் தமிழன் குரல், இலங்கைத் தமிழன் குரல், மலாயாத் தமிழன் குரல் அவன் அடிக்கடி கேட்பது. ஏனெனில், இவ்விடங் களுக்கெல்லாம் அவன் இன்றும் வெள்ளை முதலாளிகளுக்காகக் கூலிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறான். வெள்ளை ஏகாதி பத்தியங்களுக்கு- வெள்ளை முதலாளிகளுக்குக் குறைந்த கூலியில் உழைத்து உருக்குலைவதற்குரிய விலங்குகள் - இயந்திரங் களுக்காவது எண்ணெய் செலவாவதுண்டு, தேய்மானக் கழிவு உண்டு, அவைகூட இல்லாத தமிழ் இயந்திரங்கள் - தேவைப் படும்போது, தமிழகத்தின் பழைய எசமானான வெள்ளையரும், புதிய எசமானான அவன் இந்தியத் தோழனும் தமிழனைப் பார்சல் செய்து அனுப்புகிறார்கள். வெள்ளையன் தேவை நீங்கியபின் - கறவைவேளை கழிந்தபின் மாடு அடிமாட்டுச் சந்தைக்கு அனுப்பப்படுவதுபோல, இந்தத் தமிழ் மாடுகளும் தமிழர் அடிமாட்டுச் சந்தையாகிய நம் தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் வியப்புக்குரிய இன்னொரு செய்தி என்னவென்றால் கூலித் தமிழன் திருப்பியனுப்பப்படும் சமயம், குடியிருந்த தமிழன் வாழ்வே சிதையும் அளவுக்கு மேலும் அடிக்கடி கை வைக்கப்படுகிறது.

காந்தியடிகள் இந்தியர்களுக்குப் பாடுபட இந்தியா வருமுன் தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் உரிமைக்காகவே பாடுபட்டார். அவருடன் உழைத்த வர்களுள் தமிழ்ப்பெண் ‘வள்ளியம்மை' யை அவர் தம் புதல்வியாகப் பாவித்தார். அவள் தமிழ்ப்பெண்ணா யிருந்ததனாலேயே காங்கிரசு அவள் வீரப்புகழை மறந்தது - அத்துடன் இந்தியா தன்னாட்சி பெற்ற பின்பே, காந்தியடிகள் உழைப்பால் கிடைத்த உரிமைகளை இழந்து தமிழர் தவித்தனர். நிறத்திமிர் ஒருபுறமும், வெள்ளையர் கிளறிவிட்ட நீக்ரோ தமிழர் பூசலுக்கு ஒருபுறமும் ஆளாகின்றனர். இந்தியர் விடுதலை பெற்றது போலத் தமிழகமும் விடுதலை பெற்றிருந்தால் தென்னாப்பிரிக்கத் தமிழர் வாழ்வின் கடுமைகள் குறைந் திருக்கும். அயலினத்தவராகிய இந்திய ஆட்சியாளர் தம் நாட்டினர் என்று அவர்களைக் கூறிக்கொண்டே அயலினத்தார்களாகவே நடத்துகின்றனர்.

-