பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

297

என்று

மலாயாவில் 'கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் கிலிகாட்டிப்பெரும்பாலும் தமிழனே வேட்டையாடப்பட்டான். 'கம்யூனிஸ்ட்' என்ற சொல் அங்கே தமிழினத்தின் மீது பாணம் தொடுப்பதற்கே பயன்பட்ட ஒரு சாக்காக இருந்தது. அச்சமயம் விடுதலை இந்தியாவின் தூதுவராக அங்கிருந்தவர் தமிழருமல்லர். தென்னாட்ட வருமல்லர்: ஒரு வட இந்தியர்! தமிழரை நாம் இந்தியர் என்று கூறினாலும், இந்தியர் எங்கும் தமிழரை இந்தியர் என்று கருதியதில்லை. வடநாட்டுப் புயலுக்குத் தென்னாட்டுக் காங்கிரசு தலைவர்களும் ஆட்சியாளர்களும் மக்களும் முனைந்து உதவியதும், தென்னாட்டுப் புயலைத் திரு.இராச கோபாலாச் சாரியார் அரசியல் புறக்கணித்ததும், காமராசர் ஆட்சியிலும் தில்லி புறக்கணித்ததும் கண்கூடு. ஆனால், இவற்றையெல்லாம் கவனிக்காத அகில இந்தியத் தமிழரும் மலாயாத் தமிழர் நிலைகண்டு கொதித்தனர். இதன் பலனாகவே மலாயாத் தூக்கு மரம் தமிழன் கழுத்தில் பதித்த பல்லைத் தளர்த்திற்று. தமிழ் மக்களேனும் ஒன்றுபட்டால், அடிமையாட்சியில்கூட வெளி நாட்டுத் தமிழன் வாழ்வுக்குச் சிறிது ஒளி ஏற்படும் என்பதை இது காட்டிற்று. தேர்தலில் தமிழர் தமிழ்த் தேசியத்தை வலுப் படுத்தினால், அதன்முதல் நல்விளைவைக் கட்டாயமாக வெளிநாடுகளில் காணலாம்.

மலாயாப் பல்கலைக் கழகத்திலும் இந்தியப் பண்பாட்டுக்கும் இந்திய மொழிக்கும் ஒருபகுதி சென்ற சில ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டது. மலாயாவில் மூன்றுமொழி நாகரிகங்கள் கூடி வாழ்கின்றன. ஒன்று நாட்டுக்குரிய மலாய் மொழியும் மலாய் இனமும். அஃது இன்னும் தன் பழம்பெருமை அறியாத இனமாகவே இருக்கிறது. உலகப் பழைமையில் தமிழனோடொத்த பழம்பேரினம் அது. இரண்டாவது இடத்துக்குரியது சீனமொழியும் சீனஇனமும் ஆகும். இவற்றுட னொத்த மூன்றாவது இனமே தமிழ் இனம். மூன்றும் உலகின் மிகப்பழம் பேரினங்கள் - ஒத்த பழம் பேரினங்கள் ஆகும்- இம்மூன்றினங்களும் மலாயாவில் ஒத்து வாழ்ந்தால், மூன்றும் தம் பழம் பெருமையுணர்ந்து மறுமலர்ச்சி கண்டால், மலாயா உலகிலே ஒரு மிகப்பெரும் புரட்சி உண்டுபண்ண முடியும் என்பது உறுதி. ஆனால், இங்கும் இடையிருட்கால இனமாகிய இந்தியப்