பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




298

அப்பாத்துரையம் - 2

போலித் தேசிய இனம் குறுக்கிட்டுத் தமிழை உருக்குலைக்க அரும்பாடுபட்டுள்ளது; பட்டு வருகிறது.

இந்திய அரசாங்கம் இந்தியையே இந்திய மொழியாக்க ஒற்றைக்காலில் நின்று குதித்தாடிற்று. மலாயாத் தமிழன் குரல் இதை எதிர்த்தது. தமிழே அங்குள்ள இந்திய மொழியாய் இருக்கவேண்டுமென்றனர் அவர்கள். அச்சமயம் நம் அடிமைத் தமிழகத்திலிருந்து சில கொத்தடிமைகள் அங்கே சென்று, சமரசச்சாக்கில் 'இந்தியும் வேண்டா தமிழும் வேண்டா. இருவர்க்கும் பொதுவாக சமற்கிருதம் இருக்கட்டும்' என்று தலைகீழாக நின்று போராடினராம்! மலாயா அரசாங்கம் ஓர் ஏகாதிபத்தியத்தின் குரலுக்காகவோ, அதன் தாசர் குரலுக் காகவோ தமிழர் குடியாட்சியுரிமையை அடக்க முனையாமல் தமிழையே இந்திய மொழியாக்கினர். தமிழகத்தின் ஒரு சிறந்த பேராசிரியரும் - உயர்திரு. வித்துவான் மு.இராசாக்கண்ணனார் அப்பதவி ஏற்றுத் தற்போது அங்கே சென்றுள்ளார்.

இந்திய அரசியலும் அதற்குக் குற்றேவல் புரியும் தன்னுரிமை தன்னுணர்ச்சியற்ற சென்னை அரசாங்கமும் இங்கே புகுந்து மேலும் ஓர் அடிமைச் சமரச முயற்சி செய்து தமிழை ஒரு சிறிதேனும் தாழ்த்த அரும் பாடுபட்டன. தமிழ்மொழியே மலாயாவில் இந்திய மொழியாய் இருக்க வேண்டும் என்பதைத் தமிழே அடிப்படையான இந்திய மொழி என்று மாற்றி, தமிழுடன் சமற்கிருதத் துக்கும் இந்திக்கும் இடங்காண, தேசிய ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்த அயற் பண்பாட்சிகள் பாடுபட்டுவருவதாகக் கேள்விப்படுகிறோம்.

மலாயாவிலும் இலங்கையிலும் உள்ள மக்களுள் பலர் நம் அடிமைத் தமிழகத்திலிருந்து சென்ற சில நூற்றாண்டுகளில் சென்று குடியேறியவர்கள் என்பது உண்மையே. ஆனால், எல்லாரும் அப்படிக் குடியேறியவர்கள் என்ற எண்ணம் சிலகாலமாக வளர்க்கப்பட்டுவருகிறது. தன் வரலாறும் உலக வரலாறும் அறியாத தமிழன் - சில சமயம் மலாயாத் தமிழனும் இலங்கைத் தமிழனும்கூட - இதை விரும்பும்படி ஏடுகளாலும் பத்திரிகைகளாலும் பெரும் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இஃது இரண்டு வகையில் பொய்யுரை ஆகும். குடியேறிய தமிழரிலே மிகப்பலர் சென்ற இரண்டாயிர