பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

299

மூவாயிர ஆண்டுகளில் குடியேறியவர்கள் ஆவர். இதே காலத்துக்குள் இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர், பார்சிகள், குஷாணர் ஆகியவர்கள் இன்று இந்தியராகக் கருதப்படுவது போல, இந்தத் தமிழரும் மலாய் மக்கள் என்று கருதப்பட வேண்டியவர்களே ஆவர். ஆனால், உண்மையில் அவர்கள் பேசும் தமிழ் ஒலிப்பே இதனைக் காட்டும். ஆயிர ஆண்டுகட்குமுன் - கடல்கடந்த தமிழகத்துடன் தமிழர் உறவு குறைந்துவந்த காலத்துக்குமுன் - இருந்த தமிழையே அவர்கள் இன்னும் பேசுகிறார்கள்.

இரண்டாவதாக, மலாய்நாடும் இலங்கையும் கடலால் நம் தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளே. இந்நாடுகள் இடையே கடலில்லாமல், குமரி, பஃறுளி முதலிய ஆறுகளினாலே பிரிக்கப்பட்ட பண்டைக் குமரிக் கண்டத்தின் பகுதிகளே. ஆகவே, இங்குள்ள தமிழர்களுள் ஒரு பெரும்பகுதி, கருமூலப்பகுதி கடலுக்கு இப்பாற்பட்ட தமிழகத் தமிழரைப் போலவே, அவ்வந்நாட்டின் மூலக் குடிமக்கள் ஆவர். மலாய் நாட்டிலுள்ள மலாய் மக்களும், இலங்கை நாட்டிலுள்ள சிங்கள மக்களும் தமிழர்க்கு முற்றிலும் அயலானவர் களல்லர். தென்னாட்டிலே, பிற இனத்தலையீட்டால், தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு பிரிவுற்றதுபோல, இவையும் தமிழிலிருந்து பிரிவுற்ற தமிழின மொழிகளே. மக்களும் தமிழருடன் சிலகாலம் நெருங்கிய தொடர்பில்லாமல் இருந்த காலத்தில் மாறுபட்டுவிட்ட தமிழினத்தவர்களேயாவர்.

லங்கையில் சிங்களவரை ஆரியர் என்று கதைகட்டி, இந்திய ஆரிய மொழிகளுடன் சிங்களத்தைச் சேர்க்கும் முயற்சி சில காலமாக நடைபெற்று வருகிறது. சிலகாலமாக, வடதிசைத் தொடர்பினாலும் தூண்டுதலாலுமே சிங்களத் தலைவர்களைப் புத்த பிட்சுகள் தமிழர்க்கெதிராகத் திருப்பி வருகின்றனர். தமிழ் மக்கள் தம்மை இந்தியர் என்று கூறிக்கொள்வதனாலும், அகில இந்தியக் கட்சியின் ஆட்சியிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் இந்தக் கருத்தை வளர்த்து வருவதனாலுமே, இந்தியர் தமிழர்க் கெதிராகச் செய்து வரும் இந்தச் சூழ்ச்சியைத் தமிழர் காணாதிருந்து வருகின்றனர்.