பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




300

அப்பாத்துரையம் - 2

சேனநாயகா, கொத்தலாவல, பண்டாரநாயகா ஆகியவர்கள் ஆட்சி படிப்படியாகப் பண்டித நேருவுடன் பழகிய பின்பே தமிழர்க்கெதிராகப் படிப்படியாகப் புது எதிர்ப்புகள் காட்டி வருகிறார்கள். அகில இந்திய எல்லையில் தமிழன் குற்றுயிராகி வரும் சமயம்; யாழ்ப்பாணத் தமிழர்கள் தம் இனிய தமிழ்மொழியை வீறுடன் வளர்த்து, சிங்கள மக்களுடன் நேசமாக வாழ்ந்து வருவது வட ஏகாதிபத்தியத்தின் கண்களை உறுத்தியிருத்தல் வேண்டும் என்பதில் அய்யமில்லை. ஆனால், ஓர் இராசகோபாலாச்சாரி போய், ஒரு காமராசர் வந்து விட்டா ரென்ற போலி மகிழ்ச்சியால், சாதிச் சிறுபுத்தி யடிப்படையான, மகிழ்ச்சியால், அதனுடன் ஏற்பட்டுவரும் இன அழிவைப் பலர் கவனியாதிருந்து வருகிறார்கள். சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரி போன்ற ஒருவரைப் பண்டிதநேரு போன்றோர் தம் நண்பராக்கிக்கொள்ள முடியுமேயன்றிக் கொத் தடிமையாக்கிக்கொள்ள முடியாது. இதை வடஎல்லையில் இராசகோபாலாச்சாரியும், காமராசரும் நடந்து கொண்டவிதம் நன்கு காட்டும். சென்னையில் இடம் கொள்ளத் துடித்த ஆந்திரரைத் தமிழர் சார்பில் எதிர்த்து நின்றார் இராச கோபாலாச்சாரி. அவர் ஆட்சி நீடித்திருந்தால், திருத்தணி கட்டாயம் பறிபோயிராது. தேவிகுளம், பீர்மேடு, மேல்கரைச் சித்தூர்,செங்கோட்டை, நெய்யாற்றங்கரை ஆகியவற்றில் தமிழர் கட்டாயம் கோட்டை விட்டிருக்க மாட்டார்கள். அதுபோலவே இராசகோபாலாச்சாரி நீடித்து முதல்வராயிருந்து வந்தால், இலங்கைப் பிரச்சினையில் தமிழின எதிர்ப்பு இவ்வளவு மும் முரமாய் இருக்க முடியாது. 'பச்சைத் தமிழன் ஆட்சி' தமிழினத்தின் குரல்வளையை நெரிப்பவர்க்குப் பாதுகாப்பளித்துத் தமிழன் குரலை அடக்கும் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. 'இலங்கைத் தமிழர் குடியுரிமைப் பிரச்சினை, மொழி ஆட்சிப் பிரச்சினை ஆகியவற்றைப்பற்றி, இலங்கையிலிருந்து வரும் தமிழர் இங்கோ, இங்கிருந்து இலங்கை செல்லும் தமிழர் இலங்கை யிலோ பிரச்சாரம் செய்யாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று அவர் பண்டாரநாயகாவிடமே வாக்குறுதி அளித் துள்ளதாக அறிகிறோம்.