பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

301

தமிழகத்தை நேரடியாகத் தில்லி ஆண்டால்கூட, தில்லிக்குக் காமராசர் மூலமாகக் கிடைக்கும் இவ்வளவு சாதகமான நிலை இராது என்று நிச்சயமாகக் கூறலாம். தமிழர் நலங்களைக் கவனிக்க ஒரு பச்சைத்தமிழன் இருக்கிறான் என்ற எண்ணமே தமிழர் பல துறைகளில் அசட்டையாய் இருக்கும்படி செய்துவிட்டது.

தேவிகுளம், பீர்மேடு முதலிய பகுதிகள் வகையிலும் தமிழர் குரலை அடக்குவதாகப் பச்சைத்தமிழர் திரு கொச்சி அமைச்சர்களுக்கு உறுதியளித் துள்ளார் என்று தெரிகிறது.

பர்மாவில் தமிழர்நிலை பற்றிப் பேசவந்த ஒருவரிடம் அது பற்றி இந்திய அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்கக்கூட நம் பச்சைத்தமிழர் மறுத்துவிட்டார். 'எனக்குத் தமிழ் உணர்ச்சியூட்ட முயல்வது வீண்செயல்' என்று அவர் கூறினா ராம்! இத்தகைய இரும்புத் தமிழன் இருக்க நமக்கென்ன குறை என்று பண்டித நேருவும் வடவரும் கட்டாயம் எண்ணிக் கவலையற்று இறுமாந்திருக்கக் கூடும்.

தமிழா! நீ உலகின் நண்பனாயினும், உலகில் நீ உரிமை யில்லாமலும், உன் உரிமை எங்கும் எழாதபடி பார்த்துக் கொள்ளவும் பொறுப்பேற்றுக்கொள்ளவும் உனக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது! அந்த ஆதரவில் உன் இனப் பகைவரே உன்னை ஆள, உன் பகைவரே உன்னைச் சூழ்ந்துள்ள நிலையில் நீ இருக்கிறாய்! உன் இனத்தை அழிக்க விரும்பும் பகைவர்க்கு உதவியாக உன் கையும் எழா திருக்குமாக! உன் கைச்சீட்டும் உன் பகைவர் ஏற்கெனவே பெற்றுள்ள வலுவைப் பெருக்கா திருக்குமாக!

தமிழினத்தின் குரல் இன்று தமிழகத்திலே உரக்கக் கேட்கப்படுகிறது. ஆனால், அக்குரல் இதுவரை உன் வாழ்வில், சமுதாயத்திலேயே உழைத்தது. தேர்தலில் உன் உரிமையைக் காக்க நெடுநாள்வரை வாராதிருந்தது. ஏனெனில், அரசியலுரிமைக்குப் பாடுபடுமுன் அஃது உன் சமுதாய, கலை நலன்களில் கருத்துச் செலுத்தியிருந்தது. ஆனால், தமிழினத்தின் விடியல் ஒளி' அவர்களைத் தூண்டியிருக்கிறது. உன் இனப்பற்றையே தம் கேடயமாகக் கொண்டு, தம் இனப்பற்றையே