பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 2

302 வாளாக ஏந்தி அவர்கள் களம் புகுந்துள்ளனர். நீ வாழ, கடல்கடந்து உன் தோழன் உரிமை பெற, நீ நிமிர்ந்து நில். ஒரு தடவையாவது, உன் உயிர்த் தேவையான இனவளத்தை எண்ணி, மற்றப் பாசங்களை ஒதுக்கி, மற்ற மயக்கங்களைத் தள்ளி வைத்துத் தமிழினக் குரல் தரணியெங்கும் கேட்கும்படி செய்வாயாக! தமிழ்மொழியும் தமிழ்க் குரலும் உன் சட்டமன்றங்களில் முழங்கினால், உன் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளை களும் வருங் காலத்தில் உன்னை வாயார வாழ்த்தும் நிலை கட்டாயம் உண்டாகும் பிள்ளை காலத்திலென்ன, உண் கண் முன்னேகூட அந்த நிலை உண்டாகக் கூடும்.

உன் பிள்ளைகள் நல்வாழ்வை மனத்தில் கொண்டு, உரிமைப்பெட்டியில் உன் உரிமைக்கரம் நீட்டு. மங்கிய உன்வாழ்வு அதன் மூலம் பொங்குவது உறுதி. வறுமையின் வாட்டம் உன்னை விட்டும், உன் நாட்டை விட்டும் ஓடுவது உறுதி. அது நீ எழுப்பும் ஆர்வத்தை அதாவது, உன் குடும்பத்தை ஊக்கி, நண்பரைத் திரட்டி, தமிழுணர்ச்சி வாயிலாக அலையலையாகத் தமிழரைத் தமிழினத்தின் திசையில் நீ ட்டுச்செல்லும் துடிப்பைப் பொறுத்தது!