பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

303

8. தமிழகமும் தென்னாடும்

தமிழகத்தின் மொழி விரிவு, தமிழர் வாழும் பகுதி களனைத்தும் த்தும் அடங்கிய தமிழுலகம் ஆகும். இதனை நாம் பெருந்தமிழகம் என்னலாம். ஆனால், தமிழகத் தின் இன்னொரு வகை விரிவு உண்டு. அது மொழிவிரிவன்று. ஆனால், மொழி சார்ந்த இனப்பண்பின் விரிவு. அது தமிழின மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிப் பகுதிகள் சார்ந்தது. இப்பேரெல் லையை நாம் பண்டைத் தமிழக விரிவின் எஞ்சிய சின்னமாகவும் கருதலாம். செந்தமிழக மாகிய ன்றைய தமிழகத்தின் நாடு கடந்த மொழிவிரிவாகவும் மொழிகடந்த பண்பு விரிவாகவும் கருதாதிருக்க முடியாது. நல்ல குடியாட்சித் தமிழகம் அமையும் காலத்தில், தமிழகத் தேசிய அரசியல் தொலைதமிழர் வாழும் கடல்கடந்த நாடுகளின் அரசியல்களுடன் ஒரு நேச உறவும், அண்மையிலுள்ள இவ்வின நாடுகளுடன் அதனிலும் நெருங்கிய ஒரு கூட்டுறவும் கொள்ளப் போவது உறுதி. 'திராவிடம்' என்ற இந்த இன எல்லையின் பெயரால், தமிழகத்திலே ஒரு கட்சி ஏற்பட்டிருப்பதுடன் அதன் குரல் தமிழகத்தின் பழம் புகழ்க் கீதத்தைப் புதிய தமிழகத்தின் காதில் சென்ற பல ஆண்டுகளாக எழுப்பிவருகிறது. அஃது உரிமைத் தமிழகம் என்ற குறிக்கோளுடன் இந்த உரிமை இனக்கூட்டுறவு என்ற குறிக்கோளையும் ஒரே குறிக்கோளாக்கி, திராவிடம் என்று அழைக்கிறது. இது திராவிட இயக்கத்தின் பொதுக் குறிக்கோளானாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே சிறப்புக் குறிக்கோள் ஆகும். ஏனென்றால், திராவிட

யக்கம் தொடக்கக் காலத்தில் - திராவிடர் கழகமாக உருவாகுமுன் -‘தமிழ்நாடு' என்ற மொழி எல்லை மட்டுமே மேற் கொண்டிருந்தது.1944இல் 'திராவிடர் கழகம்' என்ற பெயர் ஏற்ற