பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் உரிமை

305 கண்காணா ஆர்வ ஆதரவு

கட்சியாற்றல் வடிவிலும் வடிவுகளிலும் பரவிவருகிறது.1953-ஜூலை14-இல் அது நடத்திய மும்முனைப் போராட்டம் ஒரேநாளில் தமிழகத்தின் மூவாயிரம்

ளங் காளைகளையும் நங்கையர்களையும் சிறைக்கோட்டம் காணவும் பல்லாயிரம் மக்களைத் தமிழின் உரிமைக் களம் காணவும் வைத்தது. தமிழகங் கண்ட மிகப்பெரும் பேருரிமைப் போர் அதுவே. அதுவே தமிழகத்தை ஐந்து கண்டங்களுக்கும் அறிமுகப்படுத்திவைத்தது.

திராவிட இயக்கத்தினரின் இந்த இணைவுக் குறிக்கோளைத் தமிழர் அய்யந்திரிபற அறிந்துகொள்ளுவது மிகமிக அவசியம். ஏனெனில், அகில இந்திய இயக்கத்திலேயே, அவ்வியக்க எல்லைக் குள்ளிருந்து தமிழார்வம் காரணமாக வெளியேற்றப்பட்ட தமிழரசுக் கழகத்தின் குறிக்கோளுக்கும் செயலுக்கும், இத் தமிழ்த் தேசியக் குரலுக்கும் தொடர்பு உண்டு என்றாலும், தூரமும் மிகுதி உண்டு. இரண்டையும் தமிழர் அறிதல் நன்று.

தமிழக எல்லை எது என்பதை அறுதியிட்டு அந்த எல்லையைத் தமிழகமாகக் காணும் வகையில் அகில இந்தியக் கட்சியின் தமிழ் நுனியான தமிழரசுக் கழகத்தின் ‘தமிழ்நாடு’ குறிக்கோளும், தமிழினக் குறிக்கோளான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘தமிழ்நாடு' குறிக்கோளும் ஒன்றே. ஆனால், இனக் குறிக்கோள் தமிழினத்துக்கு முழுநிறை தன்னாட்சி கோருகிறது. அதாவது வடதிசை ஏகாதிபத்தியத்தின் மேலுரிமையற்ற, தொடர்பற்ற, முழு விடுதலை நாடாகவே அது 'தமிழ்நாடு' காண விழைகிறது. அகில இந்தியக் கட்சியின் தமிழ்க் குரலோ ஆந்திர மாகாணம்போல ஒரு தமிழ் மாகாணம் பெறுவதுடன் அமைதியுற்றுவிடும். தொடக்கத்தில் எழுச்சியுற்ற விழிப்புற்ற தமிழர்களையும் கவராமல், இன்னும் தமிழகத்தின் பெரும்பாலான மக்களைக் கவராமல் காங்கிரசின் அருகே ஒரு கண்காணாச் சிற்றொளியாக அக்கழகம் நிலவவேண்டியிருப்பதன் காரணம் இதுவே.

இரண்டாவதாக, காங்கிரசு மற்றத் தமிழருடன் சேர்த்துத் தம்மையும் உதைத்தாலும், அகில இந்தியக் குறிக்கோளுடன் நிற்கும் தமிரசுக் கழகம் அதைவிட்டு அகலமுடியவில்லை.